சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட்டாலே போதும்!

Written By:
Subscribe to Boldsky

கோடைக்காலத்தில் சிறுநீரக கல் பிரச்சனை அடிக்கடி வந்து நம்மை தொல்லை செய்யும். சிறுநீரக கல் ஒருமுறை வந்துவிட்டால் அடிக்கடி வந்து நம்மை தொல்லை செய்யும். இந்த கற்கள் சிறிய அளவில் இருந்தால் மருந்து, மாத்திரைகள் மூலமாக எளிதில் இவற்றை கரைத்துவிடலாம். மேலும் அதிகமாக நீர் அருந்துதல், இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை அருந்துதல் போன்றவை சிறுநீரக கற்களை குறைக்க உதவியாக இருக்கும். இந்த பகுதியில் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரட், பாகற்காய்

காரட், பாகற்காய்

இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை:

வாழைப்பழம், எலுமிச்சை:

இவற்றில் விட்டமின் பி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்:

அன்னாச்சி பழம்:

இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன. இது சிறுநீரக கற்களை கறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்

கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு:

உப்பு:

உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

இளநீர்

இளநீர்

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் அதிகமாக அருந்த வேண்டியது அவசியமாகும். தினமும் இரண்டு இளநீராவது அருந்தலாம். அவர்கள் பழச்சாறு போன்றவற்றை கண்டிப்பாக அருந்த வேண்டும். சிட்ரஸ் பழச்சாறு, வாழைத்தண்டு சாறு போன்றவற்றை அருந்துவது சிறந்தது.

 வெயில்...

வெயில்...

வெயிலில் அலையும்போதும் வேலை செய்யும்போதும் உடலில் வெயில் தோற்றுவிக்கும் நீர் வறட்சிதான் சிறுநீரகக் கற்கள் உருவாகத் துணைபுரிகிறது. எனவே, கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

புளி, காரம்

புளி, காரம்

உணவில் காரம், புளி, மசாலாவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளான தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா போன்ற உணவு களைத் தவிருங்கள். இவற்றில் கால்சியம் அதிகம். கால்சியம் மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது.

உலர் பழங்கள்

உலர் பழங்கள்

காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோக் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்க்ரீம், சாக்லெட் ஆகவே ஆகாது. காரணம், இவற்றில் பாஸ்பேட் மிகுந்துள்ளது. இதுபோல் உலர் பழங்கள், பாதாம் பருப்பு, வாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

best foods for kidney stone

best foods for kidney stone
Story first published: Wednesday, November 1, 2017, 11:30 [IST]
Subscribe Newsletter