காலையில் ஒரு டம்ளர் ஆப்பிள் ஸ்மூத்தி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கோடைக்காலத்தில் நமக்கு தாகம் அதிகம் எடுப்பதால், பானங்களை அதிகம் பருகுவோம். அப்படி பருகும் பானங்கள், வெறும் நமது தாகத்தை மட்டும் தணிப்பதோடு, உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் வண்ணமும் இருக்க வேண்டும்.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள். அத்தகைய ஆப்பிளுடன் பட்டை சேர்த்து ஸ்மூத்தி தயாரித்துக் குடித்தால், தாகம் தணிவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

ஏனெனில் இந்த ஸ்மூத்தியில் நார்ச்சத்து, நல்ல கொழுப்புக்கள், புரோட்டீன், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை உள்ளது. சரி, இப்போது இந்த ஆப்பிள் பட்டை ஸ்மூத்தியை எப்படி தயாரிப்பது என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பட்டை தூள் - 2 ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை
வாழைப்பழம் - 1
பால் - 1 கப்
தயிர் - 1/2 கப்
ஓட்ஸ் - 4 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் - சில துண்டுகள்
மாப்பிள் சிரப் - 2 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, வேண்டுமானால் சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்தால், ஆப்பிள் பட்டை ஸ்மூத்தி தயார்!

நன்மை #1

நன்மை #1

ஆப்பிளில் பெக்டின் நார்ச்சத்து உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இதனால் இந்த பானத்தைக் குடிப்பது, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களுக்கு நல்லது.

நன்மை #2

நன்மை #2

ஆப்பிளின் தோலில் க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது மூளைச் செல்களுக்கு நல்லது. ஆகவே இதைக் குடிப்பதால், அல்சைமர் வரும் அபாயம் குறையும்.

நன்மை #3

நன்மை #3

இந்த பானத்தை காலையில் குடித்தால், இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பசியையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த பானம் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

நன்மை #4

நன்மை #4

இந்த பானம் நுரையீரலுக்கு நல்லது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முக்கியமாக இந்த பானம் இரத்த சர்க்கரை அளவை நிலையான அளவில் வைத்துக் கொள்ளும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Drinking Apple Cinnamon Smoothie

If you are wondering how to quench your thirst this summer, go for the the apple cinnamon smoothie. Read on to know about its benefits...
Story first published: Monday, April 10, 2017, 16:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter