இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு நாளில் ஒரு கட்டத்தில் ஒருமுறையாவது தலைவலியை சந்திப்போம். இப்படி தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், கண் பிரச்சனைகள், சப்தம், சளி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆனால் சிலர் நாள்பட்ட தலைவலியால் மிகவும் அவஸ்தைப்படுவார்கள். அதில் மிதமான தலைவலி முதல் தாங்க முடியாத அளவிலான தலைவலி வரை இருக்கும். அதற்கு காரணம் என்னவென்று தெரியாமலும் இருப்பார்கள்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா தலைவலியில் நான்கு வகைகள் உள்ளன. இங்கு அந்த நான்கு வகை தலைவலிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டென்சன் தலைவலி

டென்சன் தலைவலி

தற்போது எதற்கெடுத்தாலும் டென்சன் அடைவோர் அதிகம். இப்படி அடிக்கடி டென்சன் அடையும் போது பலர் தலைவலியை சந்திப்பார்கள். ஏனெனில் டென்சன் அடையும் நெற்றிப்பகுதியில் உள்ள தசைகள் மிதமானது முதல் கடுமையானது வரை சுருங்குகிறது.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கம் மட்டும் தாங்க முடியாத அளவில் வரும். இது ஏற்படுதற்கான மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவற்றால் மூளையில் அசாதாரண செயல்பாடுகள் தூண்டப்பட்டு, மூளையில் உள்ள இரத்த நாளங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

சைனஸ் தலைவலி

சைனஸ் தலைவலி

சைனஸ் தலைவலியானது கன்னங்கள், கண்களுக்கு மேல் மற்றும் கீழே வலியை சந்திக்க நேரிடும். சைனஸ் பிரச்சனைகள் இருந்தால், சைனஸ் தலைவலிடிய அடிக்கடி சந்திக்க நேரிடும்.

க்ளஸ்டர் தலைவலி

க்ளஸ்டர் தலைவலி

க்ளஸ்டர் தலைவலி என்பது சிறிதும் மாற்றம் இல்லாமல் ஒரே ஒரு கண்ணில் மட்டும் கடுமையான வலி ஆகும். இந்த க்ளஸ்டர் தலைவலி இருந்தால் ஒரே இடத்தில் அமர முடியாது. அந்த அளவில் மிகவும் பயங்கரமாக இருக்கும்.

தலைவலிக்கு பரம்பரையும் காரணமா?

தலைவலிக்கு பரம்பரையும் காரணமா?

ஆம், தலைவலியில் குறிப்பாக ஒற்றைத் தலைவலிக்கு பரம்பரையும் காரணம். குடும்பத்தில் தாய், தந்தை இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால், கட்டாயம் அந்த ஒற்றைத் தலைவலி 70% அவர்களின் குழந்தைக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதுவே தாய், தந்தையில் ஒருவரின் குடும்பத்தில் ஒற்றைத்தலைவலி பிரச்சனையால் யாரேனும் அவஸ்தைப்பட்டால், அது 25-50% வரும் அபாயம் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What type of headache do you suffer from? This is what it can mean!

Did you know that there are actually four main types of headaches? What type of headache do you suffer from? This is what it can mean!
Subscribe Newsletter