இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்பார்கள். ஆனால், உண்மையிலேயே சிறந்தது உடல் உறுப்பு தானம். இவ்வுலகில் விலைமதிப்பற்ற பொருள் ஒன்று இருக்கிறது எனில், அது நமது உயிர் தான். எத்தனை பொன், பொருள் கொடுத்தாலும் இதை வாங்க முடியாது.

இறப்பை பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

அப்படிப்பட்ட இந்த உயிரை, உடல் உறுப்பு தானம் செய்வதால் மற்றவருக்கு பரிசாக அளிக்க முடியும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு மணி நேரத்திலும், வாரத்திலும், மாதத்திலும் என்னென்ன மாற்றங்கள் காண்கின்றன என உங்களுக்கு தெரியுமா?

எச்சிலை வைத்தே உங்கள் மரணத்தை பற்றி கூறிவிட முடியும் - லண்டன் ஆய்வு தகவல்!

தெரிந்துக் கொள்ளுங்கள், தெரிந்துக் கொண்டு மண் தின்னும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முனையுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளை

மூளை

ஒருவர் இறந்த மறுநொடியே மூளை திடீரென விரிந்து இயக்கம் முடிவுறும்.

 உடல் வெப்பம்

உடல் வெப்பம்

உடலில் வெட்பநிலை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.6 ஃபாரன்ஹீட் அளவு குறைய ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் உடல் மெல்ல, மெல்ல குளிர்ந்த நிலைக்கு செல்கிறது.

 உடல் செல்கள்

உடல் செல்கள்

ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் மெல்ல, மெல்ல உடல் செல்கள் இறக்க ஆரம்பிக்கும். பிறகு உடைய ஆரம்பித்து, வெளியேற ஆரம்பிக்கும், இதனால் தான் உடல் அழுக ஆரம்பிக்கிறது.

 தசைகள்

தசைகள்

கால்சியம் தசைகளில் பில்ட் அப் ஆக துவங்குவதால், தசை இறுக்கமாக, கடினமாக மாறும்.

கழிவு

கழிவு

சில சமயங்களில் தசை இலகுவாக ஆகும் தருணத்தில், இறந்தவரின் உடலில் இருந்து மலம் அல்லது சிறுநீரும் வெளியேறும்.

தோல்

தோல்

தோல் மெல்ல, மெல்ல ஈரத்தன்மை இழந்து, சுருங்க ஆரம்பிக்கும். இதனால், இறந்தவர்களின் கூந்தலும், நகமும் வளர்வது போன்ற தோற்றமளிக்கும்.

 பழுப்பு நிறம்

பழுப்பு நிறம்

புவி ஈர்ப்பு, இறந்தவர்களின் இரத்தத்தை கீழ் நோக்கி இழுக்கும். இதனால் சருமத்தின் மேற்புறம் பழுப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்.

 பச்சையாக மாறுதல்

பச்சையாக மாறுதல்

இறந்தவர்களின் உடலில் ஆங்காங்கே பச்சை நிற தடிப்புகள் தோன்றும். இதற்கு காரணம், உடல் உறுப்புகளில் இருக்கும் என்ஸைம்கள் அதுவாக செரிக்க ஆரம்பிக்கும். இதற்கு காரணம் பாக்டீரியாக்கள்.

 துர்நாற்றம்

துர்நாற்றம்

உடல் அழுகும் போது ப்யுட்ரெஸைனை, காலரா நுண்ணுயிர் நச்சு இரசாயனங்கள் வெளியேறும். இதன் காரணத்தால் தான் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

 புழுக்கள்

புழுக்கள்

புழுக்கள், வண்டுகள் இறந்தவரின் உடலை உண்ண ஆரம்பிக்கும். புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் செரித்துவிடும்.

 ஊதா, கருப்பு

ஊதா, கருப்பு

மெல், மெல்ல இறந்தவரின் உடல் ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறும். இதற்கு காரணம், பாக்டீரியாக்கள் தொடர்ந்து இறந்தவரின் உடலை செரிப்பது தான்.

முடி

முடி

ஓரிரு வாரத்தில் இறந்தவரின் உடலில் இருந்து முடிகள் மொத்தமும் உதிர்ந்துவிடும்.

மாதத்தில் உண்டாகும் மாற்றங்கள்!

மாதத்தில் உண்டாகும் மாற்றங்கள்!

நான்கு மாதங்களில் இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசை மற்றும் சருமம் அழுகி, வெறும் எலும்புக்கூடு மட்டும் தான் மிஞ்சும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens To Your Body After Death

What Happens To Your Body After Death? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter