கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வழிகளை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இங்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பானம் தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால் பானம் ரெடி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சளி குணமாகும்

சளி குணமாகும்

அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்

ஆஸ்துமா

ஆஸ்துமா

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.

சிறுநீரகம் சுத்தமாகும்

சிறுநீரகம் சுத்தமாகும்

இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

மன அழுத்தம் நீங்கும்

மன அழுத்தம் நீங்கும்

துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கல் நீங்கும்

மலச்சிக்கல் நீங்கும்

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும்.

அசிடிட்டி குறையும்

அசிடிட்டி குறையும்

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.

அல்சர் சரியாகும்

அல்சர் சரியாகும்

இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

தலைவலி குணமாகும்

தலைவலி குணமாகும்

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

புற்றுநோய்

புற்றுநோய்

இந்த இயற்கை பானத்தை ஒருவர் தினமும் குடித்தால், தற்போது பலரைத் தாக்கும் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். இதற்கு அவற்றில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் தான் காரணம்.

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் குறையும்

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens When You Drink Tulsi Water With Turmeric Every Morning?

Did you know that the mixture of tulsi and turmeric come with a number of health benefits?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter