For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் எழுந்ததும் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேன் கலந்த நீர் குடித்தால், நினைத்துப் பார்க்க முடியாத பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இங்கு தேன் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

பழங்காலம் முதலாக உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த உணவுப் பொருள் தான் தேன். இத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Top Benefits Of Drinking Honey Water!

குறிப்பாக இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இங்கு தேன் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொண்டைப் புண்

தொண்டைப் புண்

தொடர்ச்சியாக வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, காய்ச்சலில் இருந்து விலகி இருக்கலாம். மேலும் இது தொண்டையில் இருக்கும் புண் மற்றும் வறட்டு இருமலையும் தடுக்கும்.

உடல் சுத்தம்

உடல் சுத்தம்

தேன் கலந்த நீரில் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும் மற்றும் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்தும். அதிலும் அத்துடன் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், இன்னும் சிறப்பான முறையில் ஒட்டுமொத்த உடலும் சுத்தமாகும்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

தேன் கலந்த நீரில் நொதிகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமாக இருக்கும். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.

அலர்ஜி

அலர்ஜி

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தொடர்ச்சியாக குடித்து வரும் போது, அலர்ஜி வருவதைத் தடுக்கலாம்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

தேன் கலந்த நீரைக் குடித்தால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோயின் அபாயத்தில் இருந்து விலகி இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Benefits Of Drinking Honey Water!

Here are top benefits of drinking honey water. Read on to know more...
Story first published: Friday, October 21, 2016, 18:36 [IST]
Desktop Bottom Promotion