ஒரே நாளில் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுதலை அளிக்கும் அற்புத கை மருந்து!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பலரும் சளி மற்றும் காய்ச்சலால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். இப்படி ஒருவருக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது, பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி தான். ஆரம்பதிலேயே இதற்கு சரியான மருந்துகளை எடுத்து வந்தால், அடிக்கடி அவஸ்தைப்படுவதைத் தவிர்க்கலாம்.

This Is The Miracle Against Flu And Cold! You Will Feel Better In Just One Day!!

இங்கு பலவீனமாக இருக்கும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, அடிக்கடி காய்ச்சல், சளி பிடிக்கும் தொல்லையில் இருந்து விடுபட உதவும் ஓர் அற்புத மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தானது பல மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளது மற்றும் இது வீரியம் மிக்க நிலைமைகளை சரிசெய்யும். மேலும் இது சுவாச மண்டலத்தில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

தேன்

தேன்

தேனில் பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் பண்புகள் உள்ளன மற்றும் இது தொண்டையில் உள்ள தொற்றுக்களையும் சரிசெய்யும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராடும். இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாத சத்து. எலுமிச்சை உண்ணும் உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை அதிகமாக உறிஞ்சச் செய்யும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

தேன் - 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை - 1

வெங்காயம் - 1

தண்ணீர் - 2 கப்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் நீரை கொதிக்க வைத்து, பின் அதில் வெங்காயத்தை துண்டுகளாக்கி சேர்த்து, 15 நிமிடம் வேக வைத்து இறக்கி, 10 நிமிடம் குளிர வைக்க வேண்டும். பின் அதனை வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, உடனே பருக வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த பானத்தை தினமும் மூன்று முறை குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப்படுத்தப்பட்டு, உடனே சளி மற்றும் காய்ச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Is The Miracle Against Flu And Cold! You Will Feel Better In Just One Day!!

This is the miracle against flu and cold. You will feel better in just one day. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter