வட இந்தியாவில் பிரபலமான 'பாங்' பானத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி என்றாலே அனைவருக்கும் வண்ணப் பொடிகளை தூவி விளையாடுவது தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் வட இந்தியாவில் வண்ணப் பொடிகளை தூவி விளையாடுவது மட்டுமின்றி, பாங் என்றும் பானமும் மிகவும் பிரபலமானது.

இது ஒரு சோமபானம். இந்த பாங் பானம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்று புராணங்கள் கூறுகின்றனர். இது ஆல்கஹால் வகையைச் சேர்ந்தது தான். ஆனால் இதனை அளவாக பருகினால் நல்லது. அதுவே அளவுக்கு அதிகமானால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இங்கு வட இந்தியாவில் பிரபலமான பாங் பானத்தைப் பற்றிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இயற்கை வலி நிவாரணி

இயற்கை வலி நிவாரணி

பாங் ஒரு இயற்கையான வலி நிவாரணி. இது கன்னாபிஸ் என்னும் ஒருவகை கஞ்சா இலைகள் மற்றும் மலர்களால் தயாரிக்கப்படுவது. இது இந்தியாவில் பழங்காலம் முதலாக சமயம் சார்ந்த சடங்குகளில் பருகப்பட்டு வருகிறது.

கவலையை போக்கும்

கவலையை போக்கும்

பழங்காலத்தில் பாங் என்னும் பானம் மனக் கவலைகளைப் போக்க பருகப்பட்டு வந்தது. மேலும் இந்த பானம் சிவபெருமானுடன் தொடர்பு படுத்தப்பட்டு வருகிறது.

நன்மைகள்

நன்மைகள்

பாங் என்னும் பானம் மன இறுக்கம், காய்ச்சல், ஆர்த்ரிடிஸ், செரிமான பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

பக்க விளைவு

பக்க விளைவு

பாங் பானத்தை அளவுக்கு அதிகமாக பருகினால், தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் வேகமாக இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.

பருகக்கூடாதவர்கள்

பருகக்கூடாதவர்கள்

பாங் பானத்தை இதய பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் பருகக் கூடாது.

வெறும் வயிற்றில் கூடாது

வெறும் வயிற்றில் கூடாது

பாங் பானத்தை வெறும் வயிற்றில் பருகக்கூடாது. அப்படி பருகினால், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

ஹோலி, சிவராத்திரி

ஹோலி, சிவராத்திரி

என்ன தான் இது சட்டவிரோதமான ஒன்றாக இருந்தாலும், இந்தியாவில் இது ஹோலி மற்றும் சிவராத்திரி காலங்களில் பேஸ்ட் செய்து உருண்டைகளாக விற்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Know About 'Bhang'

Here are some thing you should know about bhang. Read on to know more...
Story first published: Thursday, March 24, 2016, 15:48 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter