இந்த செயல்கள் தூக்கத்தை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இரவில் உங்களால் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? ஒருவேளை தூங்கினாலும், மறுநாள் காலையில் சுறுசுறுப்பை உணர்வதில்லையா? அப்படியெனில் நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால், நீங்கள் செய்து வரும் சில செயல்கள் உங்கள் தூக்கத்திற்கு மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கிறது என்பது தெரியாமல் இருப்பது தான்.

இங்கு உங்கள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் சில செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து அவற்றைத் தவிர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காப்ஃபைன் உணவுகள்

காப்ஃபைன் உணவுகள்

இரவில் சிலர் உணவு செரிக்க வேண்டுமென்று காப்ஃபைன் நிறைந்த ப்ளாக் காபி அல்லது வேறு சில உணவுப் பொருட்களை உண்பார்கள். இந்த உணவுகளை உட்கொண்டால், தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, தூக்கமின்மைக்கு உள்ளாக்கும். எனவே இரவில் காப்ஃபைன் நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல், தூக்கத்தை வரவழைக்கும் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களான தயிர், பால், வாழைப்பழம், முட்டை போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

சேர்த்து வைத்து வார விடுமுறையில் தூங்குவது

சேர்த்து வைத்து வார விடுமுறையில் தூங்குவது

ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு 7-8 மணிநேரத் தூக்கம் மிகவும் அவசியமானது. ஆனால் சிலர் வேலை அதிகம் உள்ளது என்று, வார நாட்களில் அளவான தூக்கத்தை மேற்கொண்டு, வார இறுதியில் சேர்த்து வைத்து தூங்குவார்கள். இப்படி தூங்கினால், உடல் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.

செல்லப் பிராணிகளுடன் தூங்குவது

செல்லப் பிராணிகளுடன் தூங்குவது

சிலரது வீடுகளில் செல்லப் பிராணிகளை வீட்டில் ஒரு நபரைப் போன்று நடத்துவதோடு, இரவில் தூங்கும் போதும் அருகில் தூங்க வைத்துக் கொள்வார்கள். இப்படி தூங்கினால் தூக்கத்தின் தரம் தான் பாதிக்கப்படும். இதனைத் தடுக்க செல்லப் பிராணியை தனியாக ஒரு அறையில் படுக்க வையுங்கள்.

அலாரம்

அலாரம்

தினமும் காலையில் அலாரம் அடிக்கும் போது, அதனை அணைத்துவிட்டு 10 நிமிடம் ஒரு குட்டித் தூக்கத்தை மேற்கொள்ளும் பழக்கம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால் இப்படி செய்தால், நாள் முழுவதும் தான் மிகுந்த களைப்பை உணரக்கூடும். ஏனெனில் இப்படி விழித்துவிட்டு மீண்டும் ஒரு புதிய தூக்கத்தைப் போடும் போது, நேரம் போதாமல் இடையே எழுந்துவிடுவதால், உடல் சோர்வு தக்கவைக்கப்படும்.

ஒரு பெக் அடிப்பது

ஒரு பெக் அடிப்பது

சிலர் இரவில் ஒரு பெக் அடித்தால் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்ற எண்ணத்துடன் ஆல்கஹால் அருந்துவார்கள். ஆனால் உண்மையில், அப்படி ஆல்கஹால் அருந்துவதால், தூக்கம் பாதிக்கப்படுவதோடு, மறுநாள் முழு சோர்வை உணரக்கூடும். எனவே உங்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமானால், சீமைச்சாமந்தி டீ ஒரு கப் குடியுங்கள்.

மொபைல், லேப்டாப் பயன்படுத்துவது

மொபைல், லேப்டாப் பயன்படுத்துவது

78% மக்கள் தூங்கும் முன் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களைப் பயன்படுத்து வார்கள். இப்படி உறங்குவதற்கு முன் பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சத்தினால், தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தியில் தாமதம் ஏற்படும். ஆகவே இதனைத் தவிர்க்க படுக்கை அறைக்கு வெளியே அச்சாதனங்களை வைத்துவிடுங்கள்.

டிவி பார்த்துக் கொண்டே தூங்குவது

டிவி பார்த்துக் கொண்டே தூங்குவது

38% மக்கள் தூக்கம் வரும் வரை டிவி பார்ப்பார்கள். இப்படி டிவி பார்ப்பதால், உங்கள் விழிப்பு நேரம் தான் அதிகரிக்கும். எனவே உங்களுக்கு இரவில் தூக்கம் வர வேண்டுமானால், ரேடியோவை ஆன் செய்து பாட்டு கேட்டுக் கொண்டே தூங்குங்கள். இதனால் நீங்கள் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sleeping Mistakes that Damage Your Health

Here are some sleeping mistakes that damage your health. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter