ஆரோக்கிய உணவுகளின் மீதான விருப்பம் ஒரு குறைபாடா?

Posted By: Staff
Subscribe to Boldsky

ஆரோக்கிய உணவுகளுக்கு அடிமை ஆவது போன்ற அறிகுறிகள் ஆர்தோரெக்ஸியா நெர்வொசா என்ற வகைக் குறைபாட்டை குறிக்கும்.

இந்தக் குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவைத் தேடுவதோடு உடல் எடையை பற்றி கவலைகொள்வதில்லை.

Is Healthy Food Obsession a Disorder?

பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடையே காணப்படும் இந்த ஆர்த்தோரெக்சியா குறைபாடு சர்க்கரை, கொழுப்பு, உப்பு மற்றும் செயற்கை நிறமிகள் இல்லாத பொருட்கள் சேர்க்கப்படாத உணவுகளை உண்டு தூய்மையான மற்றும் ஆரோக்கியமான உணர்வைப் பெரும் ஒரு மனநிலை ஆகும்.

ஆர்தோரெக்சியா குறைபாடுகள் உள்ளவர் பின்வரும் திடீர் மாற்றங்களை தங்கள் நடவடிக்கைகளில் வெளிப்படுத்துவர்:

1. உணவு வகைகள் செரிமானம், படபடப்பு, ஒவ்வாமை, மந்தம் உள்பட உடல் ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் ஆகிய விஷயங்களில் அதிக ஈடுபாடு

2. ஆரோக்கிய குறைபாடுகளைத் தவிர்க்கும் வகையில் உணவுகளையே தவிர்த்தல்

3. மூலிகை உணவுகளின் மீது ஈர்ப்பு.

4. உணவுப் பொருட்களை அதிகம் கழுவிச் சுத்தம் செய்தல் மற்றும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.

Is Healthy Food Obsession a Disorder?

5. சமூகத்தில் இருந்து ஒதுங்கி இருத்தல். ஆரோக்கிய உணவில் அதிக ஈடுபாடு காரணமாக இந்த ஆர்த்தோரெக்சியா குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்கள் மக்கள் அதிகம் கூடும் விழாக்களில் "ஆரோக்கியமற்ற" உணவினைத் தவிர்க்க வேண்டி அவற்றில் கலந்து கொள்வதில்லை. இது பின்னாளில் மன ரீதியான நோய்களுக்கும் சிக்கல்களுக்கும் வழிவகுக்கும்.

6. இந்த குறைபாடுள்ளவர்கள் தங்களுக்கென ஒரு ஆகார வழிமுறைகளை வகுத்துக் கொண்டு அவற்றை மிகவும் கடினமாக பின்பற்ற தங்களை நிர்பந்தப் படுத்திக் கொள்வார்கள். அவர்கள் அதனை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும் போது மிகவும் குற்றவுணர்வை உணருவார்கள். இது மேலும் அவர்களை இந்த குறைபாட்டில் ஆழமாகத் தள்ளும்.

7. ஆரோக்கிய உணவு உண்ணாதவர்கள் மேல் அதிருப்தியை வளர்த்துக் கொள்ளுவது.

8. பிறர் சமைத்த உணவுகளை புறக்கணிப்பதும் நண்பர்கள் மற்றும் உறவினர்களை மற்றும் அன்பிற்குரியவர்களை அலட்சியப்படுத்தி உறவுகளை குழைத்துக் கொள்ளுதல்.

ஆர்த்தோரெக்சியாவின் பாதிப்புகள்:

கடும் உணவுக்கு கட்டுப்பாட்டின் காரணமாக இந்த பாதிப்பிற்குள்ளானவர்கள் பரிதாபமாக நிறைய எடை குறைவை எதிர்கொள்வார்கள். இது அவர்களை அனாரெக்சிக்ஸ் எனப்படும் உண்ணாமல் உடல் எடையை குறைக்க நினைப்பர்வர்களைப் போல் ஆக்கிவிடும்.

காலப்போக்கில் இது ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு வழிவகுத்து இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இந்தக் கொடுமையெல்லாம் அவர்கள் ஆரோக்கியமாக வாழ நினைத்ததாலேயே நடக்கும்.

Is Healthy Food Obsession a Disorder?

உங்களுக்கு ஆர்த்தோரெக்சியா உள்ளதா என எப்படி தெரிந்து கொள்வது ?

இந்த ஓர்தொரெக்சியா நெர்வோசா என்ற பெயரை முதலில் அறிமுகம் செய்த டாக்டர் ஸ்டிவன் பிராட்மன் நமக்காக சில கேள்விகளை வடிவமைத்துள்ளதோடு அவற்றில் ஐந்தில் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறினால் நீங்கள் உணவைப் பற்றி கவலைப் படுவதை குறைக்க வேண்டும் என்றும் ஐந்திற்கும் ஆம் என்ற பதில் கூறினால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டுள்ளீர்கள் என்று பொருள்.

நீங்கள் இந்த பாதிப்பிற்குட்பட்டுள்ளீர்களா என்பதை அறிந்து கொள்ள டாக்டர் ஸ்டிவன் பிராட்மன் தந்துள்ள கேள்விகள் சில இது உங்களுக்காக:

1. ஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக நீங்கள் உங்கள் தினசரி ஆகாரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

2. உங்கள் உணவை பல நாட்களுக்கு முன்னேயே திட்டமிடுகிறீர்களா?

3. நீங்கள் உங்கள் உணவின் சுவை மற்றும் இன்பத்தை விட அதன் சத்துக்களை பற்றி அதிகம் கவலை கொள்கிறீர்களா?

Is Healthy Food Obsession a Disorder?

4. ஆரோக்கியமான உணவு உங்களுக்கு உந்துதலைத் தருகிறதா?

5. உங்கள் உணவு பழக்கத்திலிருந்து விலகுவது உங்களை குற்ற உணர்வில் தள்ளுகிறதா?

6. நீங்கள் மிகவும் ரசித்த உணவுகளை புறக்கணித்து "சரியான" உணவுக்கு மாற்றி விட்டீர்களா?

7. உங்கள் ஆகாரம் வெளியில் சென்று உண்பதை பாதித்து நண்பர்கள் உறவினர்களிடமிருந்து உங்களை தனிமைப் படுத்துகிறதா?

இதிலிருந்து வெளியேவர சில வழிகாட்டுதல்கள்:

1. உங்கள் வாழ்க்கை முறையை ஒரு நேர்மையான அலசல் செய்யுங்கள். உடல் நலம் மாற்றிய உங்களது கவலை எந்த அளவிற்கு உள்ளது எந்த அளவிற்கு அது உங்களை பாதிக்க்கிறது

2. சகஜ நிலைக்குத் திரும்ப ஒரு சிறு அடியை முன்னெடுத்து வையுங்கள். கெட்ட உணவு என்று நீங்கள் ஒதுக்கியவற்றில் சிறிதளவு சாப்பிடாத துவங்குங்கள்.

3. ஆர்தோரெக்சியா பாதிப்புக்கு ஆளானதால் உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியதில்லை.

Is Healthy Food Obsession a Disorder?

4. உணவுக்கு கட்டுப்பாட்டில் தீவிரவாதியாக இருக்காதீர்கள். சில நேரங்களில் இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் அதன் தீமைகளை சரிக்கட்ட உடற்பயிற்சி செய்வதும் தவறில்லை.

5. நண்பர்களுடனும் குடும்பத்துடனும் வெளியில் சென்று உணவருந்துங்கள். இதனை மெல்லத் துவங்கி நிதானமாகவும் செய்யலாம்.

English summary

Is Healthy Food Obsession a Disorder?

Is Healthy Food Obsession a Disorder?
Story first published: Friday, October 21, 2016, 11:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter