ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை உண்டாக்கும் மருந்துகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மன அழுத்தம், கவலை, பதட்டம் மற்றும் குறைவான டெஸ்டோஸ்டிரோன் போன்றவை தான் விறைப்புத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களாகும். ஆனால் இவை மட்டுமின்றி, நாம் மேற்கொள்ளும் ஒருசிலவற்றினாலும் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படும் என்பது தெரியுமா?

ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்!

பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவில் மருந்து மாத்திரைகளை எடுத்து வருகிறார்கள். இப்படி எடுத்து வரும் சில மருந்து மாத்திரைகளாலும் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா?

ஆணுறுப்பு விறைக்கவில்லையா? அப்போ காரணம் இதுவா இருக்குமோ...?

இங்கு விறைப்புத்தன்மை பிரச்சனையை உண்டாக்கும் சில மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டேடின்கள்

ஸ்டேடின்கள்

உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதற்கு மருந்து எடுத்து வருகிறீர்களா? அப்படியெனில், கொழுப்பைக் குறைக்க உதவும் மருந்துகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவையும் குறைத்து, அதனால் விறைப்புத்தன்மைக்கு வழிவகுக்கும்.

டையூரிக், பீட்டா மற்றும் ஆல்பா தடுப்பான்கள்

டையூரிக், பீட்டா மற்றும் ஆல்பா தடுப்பான்கள்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்படும் இந்த மருந்துகளை உட்கொண்டால், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதுடன் விறைப்புத்தன்மை பிரச்சனையையும் சந்திக்க நேரிடும். அதிலும் ஆல்பா தடுப்பான்கள் புரோஸ்டேட்டில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடு அளவை குறைத்து, ஆண்குறியின் தசைகளை மிகவும் மென்மையடையச் செய்து, விறைப்புத்தன்மைக்கு வழிவகுக்கும். எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை நாடுவதற்கு பதிலாக, உணவுகளின் மூலம் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

மன இறுக்க நிவாரணிகள்

மன இறுக்க நிவாரணிகள்

மன இறுக்கம், பதட்டம், நாள்பட்ட உடல் வலி, பசியின்மை போன்றவற்றிற்கு மன இறுக்க நிவாரண மாத்திரைகளை பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை உட்கொண்டால், செரடோனின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதனால் விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

ஆன்டி-சைகோடிக்ஸ்

ஆன்டி-சைகோடிக்ஸ்

மனச்சிதைவு நோய், இருமுனை கோளாறு மற்றும் பிற மனநல கோளாறுகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டி-சைகோடிக்ஸ் மருந்துகளும் விறைப்புத்தன்மையை உண்டாக்கும். எனவே ஆண்களே கவனமாக இருங்கள்.

வலிப்பு அடக்கிகள்

வலிப்பு அடக்கிகள்

காக்கை வலிப்பு, நாள்பட்ட வலி மற்றும் ஒற்றை தலைவலிகளுக்கு பயன்படுத்தப்படும் வலிப்பு அடக்கிகள், ஆன்ட்ரோஜென் குறைபாட்டை ஏற்படுத்துவதோடு, பாலுணர்ச்சியை அழிக்கும் மற்றும் விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicines That Can Cause Erectile Dysfunction

Did you know your regular medicines could also affect your ability to get an erection? Here are a few medicines that could cause erectile dysfunction.