ஆண்மைக் குறைவைப் போக்கும் இந்த அதிசயப் பொருள் பற்றி தெரியுமா!

Posted By:
Subscribe to Boldsky

அன்றாட உணவில் நாம் சில மூலிகைகளை சமையலில் சேர்த்து வருகிறோம். அதில் கொத்தமல்லி, புதினா போன்றவை குறிப்பிடத்தக்கவை. புதினா நாம் மணத்திற்காக சமையலில் சேர்த்துக் கொண்டாலும், அதில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

புதினாவில் புரோட்டீன், நீர்ச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், போன்ற அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன. இத்தகைய புதினாவை சட்னி, ஜூஸ் என்று எப்படி சாப்பிட்டாலும், அதிலுள்ள அனைத்து சத்துக்களையும் பெற முடியும்.

இப்போது புதினாவை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

புதினாவை உணவில் சேர்ப்பதால், நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, இரத்தம் சுத்தமாகும்.

நன்மை #2

நன்மை #2

புதினா அசைவ உணவுகள் மற்றும் கொழுப்புமிக்க உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்யும். மேலும் குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.

நன்மை #3

நன்மை #3

பெண்கள் புதினாயை உணவில் சேர்த்து வந்தால், மாதவிலக்கு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

நன்மை #4

நன்மை #4

ஆண்கள் புதினாவை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைவு ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒருவேளை ஆண்மை குறைவு இருந்தால், புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வர முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்க முடியும்.

நன்மை #5

நன்மை #5

தசை வலி, நரம்பு வலி, தலை வலி, மூட்டு வலி போன்றவற்றின் போது புதினாவை நீர்விடாமல் அரைத்து, வலியுள்ள இடத்தில் பற்று போட, வலி மாயமாய் மறைந்துவிடும்.

நன்மை #6

நன்மை #6

புதினாவை உலர வைத்து, பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நன்மை #7

நன்மை #7

இரத்த சோகை, மஞ்சள் காமாலை, வறட்டு இருமல், நரம்பு தளர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், புதினாவை தினமும் சமைத்து சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.

நன்மை #8

நன்மை #8

ஆஸ்துமா பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், புதினாவை சாப்பிட்டு வந்தால், அப்பிரச்சனை அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal Benefits Of Mint

Here are some medicinal benefits of mint. Read on to know more...
Subscribe Newsletter