நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய மக்கள் தங்களது உடல்ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து, சம்பாதிக்கும் பணத்தை ஆரோக்கியமான உணவுகளுக்கு செலவழிக்கின்றனர். இருப்பினும் இரவில் தூக்கத்தைத் தொலைத்து அவஸ்தைப்படுகின்றனர். உடல் ஆரோக்கியம் என்று வரும் போது நல்ல நிம்மதியான தூக்கம் என்பது அவசியம்.

இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவும் உணவுகள்!!!

அதிலும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 6-8 மணிநேர இரவு தூக்கம் என்பது இன்றியமையாதது. அமெரிக்காவில் வாழும் பெரும்பாலானமக்கள் போதிய தூக்கத்தைப் பெற முடியாமல், அதன் காரணமாகவே பல நோய்களால் கஷ்டப்படுகின்றனர். மேலும் இரவில் தூக்கம் வருவதற்காக மாத்திரைகள், மது, பால், சுடுநீர் குளியல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா?

ஆனால் இரவில் படுத்ததும் தூங்குவதற்கு ஓர் எளிய இயற்கை வழி ஒன்று உள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். அந்த வழியைக் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அதன்படி செய்தால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஏன் இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைக்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை #1

செய்முறை #1

முதலில் கண்களை மூடிக் கொண்டு, நாக்கை வாயின் மேல் கூரையில் தொட வேண்டும். அதுவும் மேல்வாய் பற்களின் பின்புறத்தை நாக்கால் தொட வேண்டும். இந்த நிலையிலேயே இந்த பயிற்சி முழுவதையும் செய்ய வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

நாக்கை சரியான நிலையில் தொட்ட பின்பு, மூச்சை வாயின் வாயின் வழியாக வெளியேற்ற வேண்டும்.

செய்முறை #3

செய்முறை #3

அடுத்து வாயை மூடிக் கொண்டு, மூக்கின் வழியாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, 7 வரை எண்ணிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #4

செய்முறை #4

பின் மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இது தான் இந்த மூச்சு பயிற்சியின் ஒரு சுழற்சி. இந்த மூச்சு பயிற்சியை இரவில் தூங்கும் முன் தொடர்ந்து 4 முறை செய்து வந்தால், இரவில் படுத்ததும் தூக்கம் வந்துவிடும்.

குறிப்பு

குறிப்பு

இந்த மூச்சு பயிற்சியின் போது, மூச்சை எப்போதும் வாயின் வழியாகத் தான் வெளியிட வேண்டும். இந்த முறையால் ஆழ்ந்த நித்திரையை வேகமாக பெறுவதோடு, டென்சன், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்தும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

If You Touch The Roof Of Your Mouth With Your Tongue And Breathe, This Will Happen!

நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம், If you touch the roof of your mouth with your tongue and breathe
Story first published: Friday, July 29, 2016, 16:55 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter