அன்றாட உணவில் 100 கிராம் பீட்ரூட் சேர்ப்பதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் எவ்வளவு முறை பீட்ரூட்டை உங்கள் உணவில் சேர்க்கிறீர்கள்? நீங்கள் அப்படி அடிக்கடி சேர்ப்பதில்லை என்றால், முதலில் அப்பழக்கத்தைக் கைவிடுங்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குளுக்கோஸ் அளவை கட்டுப்பாட்டுடன் வைப்பது முதல் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்குவது வரை பல நன்மைகளை பீட்ரூட் வாரி வழங்கும்.

Here's What Will Happen If You Eat 100 Grams Beetroot Daily

இங்கு அன்றாட உணவில் 100 கிராம் பீட்ரூட் சேர்ப்பதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் உங்கள் உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம் குறையும்

இரத்த அழுத்தம் குறையும்

பீட்ரூட்டினுள் உள்ள உட்பொருட்கள் தமனிச் சுவர்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே தினமும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட்டை அன்றாடம் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

பீட்ரூட்டில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா சையனின் உள்ளது. பீட்டா சையனின்கள் பீட்ரூட்டிற்கு நிறத்தை வழங்குவதோடு, செல்களுக்கு வலுவூட்டவும் செய்யும். மேலும் பீட்ரூட் இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

கர்ப்பிணிகளுக்கு மற்றும் சிசுவிற்கு நல்லது

கர்ப்பிணிகளுக்கு மற்றும் சிசுவிற்கு நல்லது

பீட்ரூட்டில் ஃபோலிக் அமிலம் அதிகமாக உள்ளது. இச்சத்து கர்ப்பிணிகளுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. மேலும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

எலும்பு பிரச்சனைகள் தடுக்கப்படும்

எலும்பு பிரச்சனைகள் தடுக்கப்படும்

பீட்ரூட்டில் சிலிகா உள்ளது. இது எலும்புகளுக்கு வேண்டிய கால்சியத்தைப் பெற உதவும். கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு அத்தியாவசியமானது. எனவே எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக வைத்துக் கொள்ள, எலும்பு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸைக் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் இருப்பவர்கள், பீட்ரூட்டை உணவில் சேர்ப்பதன் மூலம், சர்க்கரையின் மீதுள்ள தங்களது ஆவல் பூர்த்தியாகும். மேலும் பீட்ரூட்டில் மிதமான அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், இது மெதுவாக சர்க்கரையை வெளியிடும்.

சோர்வு நீங்கும்

சோர்வு நீங்கும்

மிகுந்த களைப்பை உணர்ந்தால், தினமும் சிறிது பீட்ரூட்டை அன்றாட உணவில் சேர்த்து வர, களைப்பு நீங்கி, உடலுக்கு புத்துணர்ச்சி கிட்டும்.

பாலியல் ஆரோக்கியம் மேம்படும்

பாலியல் ஆரோக்கியம் மேம்படும்

பீட்ரூட் ஒரு நேச்சுரல் வயகரா போன்று செயல்படும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் உடலில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடை வெளியேற்றி, நரம்புகளை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை அந்தரங்க உறுப்பில் அதிகரித்து, பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

பீட்ரூட்டில் உள்ள பீட்டா சையனின்கள், புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து, உடலில் ஏற்படும் பல வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும்.

மலச்சிக்கல் நீங்கும்

மலச்சிக்கல் நீங்கும்

பீட்ருட்டில் உள்ள அதிகப்படியான கரையக்கூடிய நார்ச்சத்து, மலமிளக்கி போன்று செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Here's What Will Happen If You Eat 100 Grams Beetroot Daily

Here are some reasons why you ought to add 100 grams beetroot daily into your eating regimen. Read on to know more...
Story first published: Wednesday, November 9, 2016, 9:30 [IST]
Subscribe Newsletter