தினமும் 30 நிமிடம் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மை பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும், பலருக்கு தெரிந்திருக்காது.

பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதால், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும்.

இங்கு தினமும் ஒருவர் 30 நிமிடம் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வரும் அபாயம் குறையும். ஆய்வுகளும் வயதான காலத்திலும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள், பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் குறைவதாக கூறுகின்றன.

நன்மை #2

நன்மை #2

30 நிமிட நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும், ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

நன்மை #3

நன்மை #3

ஒருவர் தினமும் குறைந்தது 30 நிமிடம் நடப்பதன் மூலம், நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோர்பின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்.

நன்மை #4

நன்மை #4

தொடர்ச்சியான வாக்கிங் பயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.

நன்மை #5

நன்மை #5

உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிட வேகமான நடைப்பயிற்சியை மேற்கொண்டால், அதனால் 150 கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையில் மாற்றம் தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Reasons Why You Should Take A Brisk Walk Every Single Day!

Here are some reasons why you should take a brisk walk every single day.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter