வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதுன்னு தெரியும்.. ஆனா எப்படி குடிக்கிறது நல்லதுன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் இப்பழக்கமானது ஜப்பானில் மிகவும் பிரபலமானது. ஜப்பானிய மக்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியமும் இதுவே.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

ஆனால் ஜப்பானிய மக்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி, ஒருசில வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள். இதை ஒருவர் தினமும் பின்பற்றி வந்தால், அதனால் உடலில் உள்ள பிரச்சனைகள் குறிப்பிட்ட காலத்தில் சரியாகிவிடும்.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மேலும் ஆராய்ச்சியாளர்களும் வெறும் வயிற்றில் தினமும் தண்ணீர் குடித்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக கூறுகின்றனர். சரி, இப்போது அந்த வழிமுறைகள் குறித்து விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழிமுறை #1

வழிமுறை #1

காலையில் தூங்கி எழுந்ததும் முகத்தைக் கழுவி விட்டு, 4 டம்ளர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் பற்களைத் துலக்கும் முன் குடிக்க வேண்டும்.

வழிமுறை #2

வழிமுறை #2

அதன் பின்பு பற்களைத் துலக்கவும். ஆனால் பற்களைத் துலக்கிய பின், 40-45 நிமிடத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. அதற்கு பிறகு காலை உணவை உட்கொண்டு எப்போதும் போன்று இருக்கலாம்.

வழிமுறை #3

வழிமுறை #3

முக்கியமாக மூன்று வேளையும் உணவை உட்கொண்ட பின்னர் 2 மணிநேரத்திற்கு ஸ்நாக்ஸாக கூட எதையும் உட்கொள்ளக் கூடாது.

வழிமுறை #4

வழிமுறை #4

இந்த முறையைப் பின்பற்றும் முதல் நாளில் 4 டம்ளர் தண்ணீரைக் குடித்து ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு நாளும் ஒரு டம்ளர் நீரை அதிகரிக்க வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

மேலே சொல்லப்பட்டுள்ளதை தினமும் பின்பற்றி வந்தால், உடலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் குறைந்து, உடலில் ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

நன்மைகள்

நன்மைகள்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், ஆஸ்துமா, சிறுநீரக நோய்கள், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, வாந்தி, தலைவலி, கண் நோய்கள், ஆர்த்ரிடிஸ், மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

எத்தனை நாட்கள் பின்பற்ற வேண்டும்?

எத்தனை நாட்கள் பின்பற்ற வேண்டும்?

இந்த முறையை எந்த உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் எத்தனை நாட்கள் பின்பற்ற வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாய்வுத் தொல்லை - 10 நாட்கள்

மலச்சிக்கல் - 10 நாட்கள்

நீரிழிவு - 30 நாட்கள்

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

காசநோய் - 90 நாட்கள்

ஆர்த்ரிடிஸ் நோயாளி

ஆர்த்ரிடிஸ் நோயாளி

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள், இந்த முறையை முதல் வாரம் 2 நாட்களும், பின் அடுத்த வாரத்தில் இருந்து தினமும் பின்பற்ற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Drinking Water On Empty Stomach Immediately After Waking Up!

Here are some benefits of drinking water on an empty stomach. Read on to know more....
Please Wait while comments are loading...
Subscribe Newsletter