ஆண்கள் தினமும் ஒருமுறை உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தால் புற்றுநோய் தாக்காது - ஆய்வு முடிவு

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களை மட்டுமே தாக்கும் ஒரு வகை புற்றுநோய் தான் புரோஸ்டேட் புற்றுநோய். இந்த புற்றுநோயின் தாக்குதலில் இருந்து ஆண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஓர் வழியை ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. அது ஆண்கள் தினமும் ஒருமுறை உச்சக்கட்ட இன்பத்தைக் கண்டால், புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கம் குறையும் என்பது தான்.

எப்படியெனில் தினமும் ஆண்கள் ஒருமுறை உச்சக்கட்ட இன்பத்தை உணரும் போது, புற்றுநோய்களை உண்டாக்கும் பொருள் புரோஸ்டேட் சுரப்பியில் இருந்து வெளியேற்றப்படுகிறது. மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட விந்தணுக்கள் வெளியேற்றப்பட்டவுடன், புதிய விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படுவதால், ஆண் இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

மேலும் இந்த ஆய்வு 45 வயதிற்கு மேற்பட்ட சுமார் 30,000 ஆண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ஒரு மாதத்தில் 30 முறைக்கு மேல் விந்தணு வெளியேற்றப்பட்டவர்களுக்கு 20 சதவீதம் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இங்கு தினமும் ஒருமுறை உச்சக்கட்ட இன்பத்தை ஆண்கள் அடைவதால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம் நீங்கும்

மன அழுத்தம் நீங்கும்

மன அழுத்தம் ஒருவரின் உயிரையே பறிக்கும் அளவில் மோசமானது. அத்தகைய மன அழுத்தமானது ஆண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையும் போது குறைந்து, மனம் ரிலாக்ஸாகும். எனவே உங்கள் மனதில் ஒருவித டென்சன் அல்லது அழுத்தம் இருந்தால், அதனைக் குறைக்க உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்யலாம்.

கவனம் மேம்படும்

கவனம் மேம்படும்

ஆம், உச்சக்கட்ட இன்பத்தை அடைவதன் மூலம் ஒருவரின் மனநிலை ஒருநிலைப்படுத்தப்பட்டு, ஒருவிஷயத்தில் சரியான கவனத்தை செலுத்த முடியும். இது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பொருந்தும்.

தூக்கமின்மை குணமாகும்

தூக்கமின்மை குணமாகும்

சுயஇன்பம் அல்லது உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் ஆண்கள் நன்கு தூங்கிவிடுவார்கள். எனவே தினமும் நீங்கள் ஒருமுறை சுயஇன்பம் கண்டால், அதை நினைத்து வேதனைப்பட வேண்டாம். நீங்கள் சரியாக தூங்காமல் இருந்தால் தான், உடல்நலம் பாதிக்கப்படும். எனவே இந்த பழக்கத்தை நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான ஓர் சிறந்த வழி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

சிறந்த வலிநிவாரணி

சிறந்த வலிநிவாரணி

மற்றொரு ஆய்வு உச்சக்கட்ட இன்பம் ஓர் சிறந்த வலிநிவாரணியாக செயல்படும் என்று சொல்கிறது. அதிலும் தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் சற்று ரிலாக்ஸ் அடைவதாக சொல்லப்படுகின்றன.

வாழ்நாள் நீடிக்கும்

வாழ்நாள் நீடிக்கும்

பல ஆய்வுகளில் அதிகளவு உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த ஆண்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதற்கு ஆண்களின் இனப்பெருக்க மண்டலம் சீரான செயல்பாட்டில் இருந்தது காரணமாக சொல்லப்படுகிறது.

இளமைத் தக்க வைக்கப்படும்

இளமைத் தக்க வைக்கப்படும்

உச்சக்கட்ட இன்பம் ஒருவரின் உடலில் மனநிலையை சந்தோஷமாக உணர வைக்கும் நல்ல கெமிக்கலை சுரப்பதோடு, உடலில் உள்ள அணுக்கள் ஒவ்வொன்றையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது. இதனால் முதுமை தள்ளிப் போடப்பட்டு, இளமை தக்கவைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do Orgasms Save Men From Cancer?

Are orgasms good for you? A new study says that men who have frequent orgasms tend to reduce their chances of suffering prostate cancer.
Story first published: Tuesday, January 12, 2016, 15:38 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter