வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கான சில கிராமத்து வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வயிற்றுப் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. இந்த புழுக்கள் ஓர் ஒட்டுண்ணிகள். இவை குடலை இருப்பிடமாக கொண்டு வளரும். இந்த புழுக்களில் பல வகைகள் உள்ளன. அதில் உருளைப்புழுக்கள், ஊசிப்புழுக்கள், கொக்கிப்புழுக்கள், நாடாப்புழுக்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நம் உடலில் புழுக்கள் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வதென்று தெரியுமா?

இவை உணவுகள் மூலமாகவும், சுகாதாரமற்ற குடிநீரின் மூலமாகவும், உடலினுள் நுழையும். அதுமட்டுமின்றி நன்கு சமைக்காத உணவுகள் மூலமாகவும் இவை நுழையும். வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவை சில நேரங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவை அடிவயிற்றில் வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலப்புழையில் அரிப்பு, தூக்கமின்மை, குமட்டல், எடை குறைவு போன்றவை.

உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

எனவே இப்பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், வாரம் ஒருமுறை வயிற்றுப்புழுக்களை அழித்து வெளியேற்றும் சில வைத்தியங்களை மேற்கொள்ள வேண்டும். இங்கு வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கும் சில கிராமத்து வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து பின்பற்றி நன்மை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காய சாறு

வெங்காய சாறு

வெங்காய சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல ஓர் சிறப்பான பொருள். அதற்கு வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும்.

மாதுளை தோல்

மாதுளை தோல்

மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள மருத்துவ குணத்தால், அதனைக் கொண்டு எப்பேற்பட்ட பிரச்சனையையும் சரிசெய்யலாம். அதற்கு தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

பாகற்காய்

பாகற்காய்

பாகற்காயை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம்.

எலுமிச்சை விதைகள்

எலுமிச்சை விதைகள்

எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

ரைஸ் வினிகர்

ரைஸ் வினிகர்

1 டேபிள் ஸ்பூன் அசிட்டிக் ரைஸ் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, குடிப்பதன் மூலமும் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதிலும் இச்செயலை ஒரு நாளில் 3-4 டம்ளர் என வாரம் ஒருமுறை குடித்து வர, வயிறு சுத்தமாக புழுக்களின்றி இருக்கும்.

கிராம்பு

கிராம்பு

தினமும் 1-2 கிராம்பை உட்கொண்டு வர, அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மையினால், புழுக்கள் வெளியேறிவிடும். முக்கியமாக கிராம்பு வளர்ந்த ஒட்டுண்ணிகளை அழிப்பது மட்டுமின்றி, அதன் முட்டைகளையும் முற்றிலும் அழித்து வெளியேற்றிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bitter Remedies For Intestinal Worms

Intestinal worms is a common problem and the bitter remedies are the best ways to treat them. Read to know which are the home remedies to treat intestinal worms.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter