ஆலிவ் ஆயிலைக் கொண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு காண்பது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

ஆலிவ் ஆயிலில் சமையல் செய்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று உடல்நல நிபுணர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள். இதற்கு ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பது தான். அதுமட்டுமின்றி, இதில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், வைட்டமின் ஈ மற்றும் கே போன்றவையும் உள்ளது.

Best Ways To Use Olive Oil To Treat Constipation Effectively

இத்தகைய ஆலிவ் ஆயில் நமக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் உடனடி நிவாரணம் வழங்கும் என்பது தெரியுமா? இங்கு ஆலிவ் ஆயிலைக் கொண்டு மலச்சிக்கல் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் மிகுந்த அவஸ்தைப்பட்டால், அதைப் பயன்படுத்தி தீர்வு காணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள்

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, மன அழுத்தம், உணவில் போதிய நார்ச்சத்து இல்லாமை, மோசமான உணவுப் பழக்கங்கள், மிகுந்த காரம் மற்றும் எண்ணெய் உணவுகள் போன்றவைகள் தான் மலச்சிக்கலுக்கு காரணம்.

வழி #1

வழி #1

தயிருடன் ஆலிவ் ஆயில் சேர்த்து பயன்படுத்துவது. தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. இது குடலில் பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்தை சீராக்கும். ஆலிவ் ஆயிலில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குடலியக்கத்தை மேம்படுத்தும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

1 சிறிய கப் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2 முறை உட்கொள்ள வேண்டும்.

வழி #2

வழி #2

எலுமிச்சையில் அமிலம் அதிகம் உள்ளது. ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, குடல் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெறும்.

பயன்படுத்தும் முறை:

பயன்படுத்தும் முறை:

1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் 1 டீஸ்பூன் ஆவில் ஆயில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.

வழி #3

வழி #3

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுமாயின், காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் படுக்கும் முன்னும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் குடியுங்கள். இதனால் மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Ways To Use Olive Oil To Treat Constipation Effectively

Olive oil is used not just to garnish your food, but it is also used to treat constipation. Here is how, check it.
Story first published: Thursday, December 29, 2016, 14:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter