For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

கேரட், இஞ்சியை ஒன்றாக உட்கொள்ளும் போது, உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு கேரட் மற்றும் இஞ்சி ஜூஸை தினமும் காலையில் குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

அனைவருக்குமே கேரட் ஜூஸை தினமும் குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் அந்த கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாற்றினையும் சேர்த்துக் குடித்தால், உடல் நலம் மட்டுமின்றி, மன நலமும் மேம்படும். உடலின் ஆற்றலை அதிகரிக்க எனர்ஜி பானங்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவைகளால் உடலுக்கு எந்த ஒரு நன்மையும் விளைவதில்லை.

ஆனால் கேரட் மற்றும் இஞ்சியில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. மேலும் இஞ்சி மருத்துவ குணம் நிறைந்த ஒன்று. இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளும் போது, உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு கேரட் மற்றும் இஞ்சி ஜூஸை தினமும் காலையில் குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

கேரட் மற்றும் இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் சுத்தப்படுத்தும் பண்புகள் இதயத்தின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். அதிலும் கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டின், ஆல்பா-கரோட்டின் மற்றும் லுடீன் போன்றவை மாரடைப்பு வரும் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் அதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இஞ்சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதுடன், இரத்த அழுத்தத்தை சீராகவும் வைத்துக் கொள்ளும்.

நன்மை #2

நன்மை #2

இந்த ஜூஸ் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும். குறிப்பாக கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, இரத்த செல்களுக்கு நல்லது. அதே சமயம் இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். முக்கியமாக இந்த பானம் உடலை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

நன்மை #3

நன்மை #3

கேரட் மற்றும் இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிப்பு, சர்க்கரை நோயை அண்டவிடாமல் செய்யும். குறிப்பாக இஞ்சி இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலினை அதிகம் சுரக்கச் செய்து, சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கேரட் நல்லது. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. அதே சமயம் இதில் உள்ள கரோட்டீனாய்டுகுள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

நன்மை #4

நன்மை #4

கேரட் மற்றும் இஞ்சி சாறு சருமத்திற்கு மிகவும் நல்லது. கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் சரும செல்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், சரும செல்களுக்கு சத்துக்களை வழங்கி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

நன்மை #5

நன்மை #5

நற்பதமான கேரட், இஞ்சி ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோய்களை எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கும். குறிப்பாக கேரட் கருப்பை, குடல், நுரையீரல், மார்பகம் மற்றும் இதர புற்றுநோய்களை எதிர்த்து, உடலுக்கு பாதுகாப்பு வழங்கும். இஞ்சி புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

கேரட் - 4-5

இஞ்சி - 1/2 இன்ச்

ஆரஞ்சு/எலுமிச்சை - பாதி

பட்டை தூள் - சிறிது

உப்பு - சிறிது

செய்முறை:

செய்முறை:

கேரட்டை நன்கு சுத்தமாக கழுவி, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியையும் நீரில் கழுவி தோலை நீக்கி துண்டுகளாக்கவும்.

பின் இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் ஆரஞ்சு/எலுமிச்சை சாற்றினையும், பட்டைத் தூளையும் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, காலை உணவின் போது ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Drinking Carrot Ginger Juice For Breakfast

Here are five benefits of drinking fresh carrot and ginger juice daily.
Desktop Bottom Promotion