குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில எளிய ஆசனங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தூங்கும் போது அருகில் உள்ளோர் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் பயங்கர சப்தத்துடன் குறட்டை விடுபவரா நீங்கள்? குறட்டையைத் தடுப்பது எப்படி என்று தெரியாமல் இருப்பவரா? இதற்கு யோகா ஒரு நல்ல தீர்வை வழங்கும்.

ஏனெனில் யோகா செய்யும் போது, நுரையீரல் சீராக செயல்படுவதோடு, உடல் முழுவதும் இரத்த ஓட்டமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இரவில் படுக்கும் போது மூச்சுக்குழாய்கள் விரிவடைந்து, குறட்டை வருவதைத் தடுக்கும்.

சரி, இப்போது குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும் சில எளிய ஆசனங்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிராணயாமம்

பிராணயாமம்

பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியை தினமும் செய்து வந்தால், மூச்சுக் குழாயில் உள்ள அடைப்புகள் நீங்கி, நுரையீரலின் ஆரோக்கியம் மேம்பட்டு, குறட்டை வருவது தடுக்கப்படும்.

ப்ரமாரி பிராணயாமம்

ப்ரமாரி பிராணயாமம்

இந்த யோகா முகம் மற்றும் கழுத்தில் உள்ள தசைகளை வலிமைப்படுத்துவதோடு, மூச்சுக் குழாய்களையும் சுத்தம் செய்யும். இந்த யோகா செய்வதற்கு பத்மாசனம் நிலையில் அமர்ந்து, கண்களை மூடி, மூச்சை உள்ளிழுத்து காதுகளை பெருவிரலால் மடிக்க வேண்டும்.

பின் படத்தில் காட்டியவாறு ஆள்காட்டி விரலை புருவங்களுக்கு மேலேயும், இதர விரல்களை கண்களுக்கு மேலேயும் வைக்க வேண்டும். பின்பு சுண்டு விரலால் மூக்கின் பக்கவாட்டுப் பகுதியில் அழுத்தம் கொடுத்து, மனதை புருவங்களுக்கிடையே கொண்டு வர வேண்டும். பின் மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதுப்போன்று 5 முறை செய்ய வேண்டும்.

உஜ்ஜயி பிராணயாமம்

உஜ்ஜயி பிராணயாமம்

இந்த மூச்சுப் பயிற்சி, நரம்பு மண்டலத்திற்கு நல்ல மசாஜ் வழங்கி, சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுவித்து, நுரையீரலில் இருந்து சளியை வெளியேற்றும்.

சிம்மாசனம்

சிம்மாசனம்

இந்த ஆசனம், சுவாச மண்டலத்தை மேம்படுத்துவதோடு, நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குறட்டை வருவதைத் தடுக்கலாம்.

உஷ்ட்ராசனம்

உஷ்ட்ராசனம்

இந்த வகை ஆசனம், மார்பக பகுதிகளை விரிவடையச் செய்து, சுவாச பிரச்சனையைத் தடுக்கும். மேலும் இந்த ஆசனம் முகத்தில் உள்ள திசுக்களை செயல்படச் செய்து, சுவாச பாதைகளை விரிவடையச் செய்து, சுவாச மண்டலத்தில் உள்ள நரம்புகளைத் தூண்டும்.

மட்ஸ்யாசனம்

மட்ஸ்யாசனம்

இந்த ஆசனம், மார்பு, முதுகு, கழுத்து, தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகளை மெருகேற்றும். மேலும் இந்த ஆசனம் சுவாச மண்டலத்தில் உள்ள பற்றாக்குறைகளைச் சரிசெய்யவும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Yoga Asanas To Help You Deal With Your Snoring

Do you snore while you sleep? Yoga can help improve your lung capacity and blood circulation and ensure that all your air passages remain completely open while you sleep. Try these yoga poses recommended by yoga expert.
Story first published: Monday, October 3, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter