ஆண்களே! அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்....

By: Babu
Subscribe to Boldsky

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் அந்தரங்க உறுப்பை மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். ஆனால் ஆண்கள் மிகவும் சோம்பேறி. இந்த விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். சாதாரணமாக நினைப்பார்கள்.

அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

ஆனால் இப்படி அக்கறை எடுத்துக் கொள்ளாமல இருந்தால், அப்பகுதியில் சீக்கிரம் தொற்றுகள் ஏற்படக்கூடும். அதிலும் அப்பகுதி எப்போதும் காற்றோட்டமின்றி இருப்பதால், அதிகம் வியர்த்து, அதனால் அப்பகுதியில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். எனவே ஆண்களுக்கு அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்களை தமிழ் போல்ட்ஸ்கை கொடுத்துள்ளது.

ஆண்களின் அந்தரங்க உறுப்பைப் பற்றிய ரகசியங்கள்!

அவற்றைப் படித்து அதன்படி பின்பற்றி வந்தால், நிச்சயம் அந்தரங்க உறுப்பை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்த பின் அரிப்பு ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மென்மையான சோப்பு

மென்மையான சோப்பு

ஆணுறுப்பு மிகவும் சென்சிடிவ்வானது. எனவே மிகவும் கவனமாக அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஆண்குறியின் முனையில் தான் அதிக அழுக்குகள் சேரும். மேலும் அவ்விடத்தில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகும். எனவே அவ்விடத்தை மென்மையான சோப்பு கொண்டு தினமும் தவறாமல் கழுவ வேண்டும். மேலும் ஜிம் சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்ததும் கழுவ வேண்டியது முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகம் வியர்த்திருப்பதால், கழுவ வேண்டும்.

ட்ரிம்/ஷேவிங்

ட்ரிம்/ஷேவிங்

அந்தரங்க பகுதியில் வளரும் முடியை அவ்வப்போது ட்ரிம் அல்லது ஷேவிங் செய்துவிட வேண்டும். ஏனெனில் முடி இருந்தால், அதிகம் வியர்க்கும். அதுமட்டுமின்றி முடி அதிகம் இருந்தால், அப்பகுதியில் பொடுகு, பேன் போன்றவை தாக்கக்கூடும். எனவே மாதம் ஒருமுறை தவறாமல் ட்ரிம் அல்லது ஷேவிங் செய்ய வேண்டும்.

உடலுறவுக்கு முன் மற்றும் பின்

உடலுறவுக்கு முன் மற்றும் பின்

உடலுறவு கொள்ளும் முன்னும் சரி, பின்னும் சரி, மறக்காமல் கழுவ வேண்டும். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். முக்கியமாக உடலுறவுக்கு முன் ஆண்கள் கழுவ வேண்டியது அவசியம். ஏனெனில் ஆண்குறியின் முனையில் இருக்கும் ஒருவித திரவமானது துணைக்கு தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே தவறாமல் உறவுக்கு முன்னும், பின்னும் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

சுயஇன்பம் காணும் ஆண்களுக்கு...

சுயஇன்பம் காணும் ஆண்களுக்கு...

சுயஇன்பம் காணும் ஆண்கள், அதற்கு பின் கட்டாயம் கழுவிட வேண்டும். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதைத் தவிர்ப்பதோடு, பூஞ்சையின் வளர்ச்சியையும் தவிர்க்கலாம்.

ஆண்குறியின் மேல்தோல்

ஆண்குறியின் மேல்தோல்

ஆண்குறியின் மேல்தோலுக்கு அடியில் சுத்தமாக கழுவ வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் அந்த இடம் தான் பாக்டீரியாக்கள் அதிகம் வளர்வதோடு, சேரவும் செய்யும். முக்கியமாக அந்த இடத்தை கழுவும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இரவில் காற்றோட்டம் கொடுங்கள்

இரவில் காற்றோட்டம் கொடுங்கள்

அந்தரங்க பகுதியில் காற்றோட்டம் இருக்கும் படி செய்ய வேண்டியது அவசியம். அதற்கு இரவில் படுக்கும் போது, உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும். இதனால் அப்பகுதியில் வியர்ப்பதை தவிர்ப்பதோடு, துர்நாற்றம் வீசுவதையும் தவிர்க்கலாம்.

கடுமையான துர்நாற்றம்

கடுமையான துர்நாற்றம்

ஆணுறுப்பின் முன் பகுதியில் மாவுமாவாக உள்ள ஸ்மெக்மா என்ற மாவுப்பொருள் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதனை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்யாவிட்டால், அது ஆண்குறியை சிவக்கச் செய்வதோடு, வீக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்த ஸ்மெக்மா ஆணுறுப்பு புற்றுநோயைக் கூட உண்டாக்கும்.

உள்ளாடை

உள்ளாடை

தினமும் குளிக்கும் போது உள்ளாடையை வெறும் நீரில் அலசாமல், சோப்பு பயன்படுத்தி, சுடுநீரில் அலசி உலர வைக்க வேண்டும். குறிப்பாக காட்டன் உள்ளாடையைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் வியர்வையை காட்டன் உறிஞ்சி, அவ்விடத்தில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Keep Your Penis Clean

Here are some of the best tips to keep your penis clean and healthy. Like all the parts of your body, the penis needs special attention.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter