Latest Updates
-
தீபாவளி பட்டாசு புகையால் கண் எரிச்சல், சரும அலர்ஜி, மூச்சுத்திணறலா? பாதுகாப்பாக இருக்க டாக்டர் கூறும் டிப்ஸ்! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. உங்க ராசி என்ன? -
செக் எழுதும்போது ஏன் தொகைக்கு பக்கத்தில் 'ONLY' என்று எழுதுகிறோம் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
வாக்கிங்கை விட அதிக ஆரோக்கிய நன்மைகள் தரும் ஜாக்கிங்!!!
தானத்தில் சிறந்த தானம் எப்படி இரத்த தானமோ, அவ்வாறு பயிற்சியில் சிறந்த பயிற்சி ஓட்டப் பயிற்சி என்று கூறலாம். ஆம்! மூளையில் இருந்து கால்கள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வாரித் தருகிறது ஓட்டப் பயிற்சி.
வண்டியை ஓரங்கட்டிட்டு, நடராஜா சர்வீஸூக்கு மாறினா... உடம்புக்கு எவ்வளவு நன்மை தெரியுமா!!!
எலும்புகளுக்கும், கால்களுக்கும் மட்டுமல்ல நல்ல உறக்கத்திற்கு, ஆயுளை நீட்டிக்க, மனநிலையில் சிறந்த முன்னேற்றம் காண என பல உடல்நல நன்மைகளை தருகிறது ஓட்டப்பயிற்சி. அதற்கென்று நீங்கள் உசைன் போல்ட்டை போல எல்லாம் ஓட வேண்டும் என்றில்லை. மிதமான வேகத்தில் ஜாக்கிங் போல ஓடி பயற்சி செய்தாலே போதுமானது!!!
வாக்கிங் செல்வதால் உங்கள் கால்கள் வலுவடையுமா...?
இனி, ஜாக்கிங் செய்வதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

மனநிலையில் மாற்றம்
மன அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது தினமும் அரைமணி நேரம் ஜாக்கிங் செய்து வந்தால் மனநிலையில் நல்ல முன்னேற்ற காணலாம்.

ஆயுள் நீடிக்கும்
தினமும் 10 - 20 நிமிடங்கள் ஜாக்கிங் செய்து வந்தால், உங்கள் மரணத்திற்கான சதவீதம் 30 - 60% குறைகிறதாம்.

உடல் எடை
தினமும் ஜாக்கிங் செய்வதனால் உடல் எடைக் குறையும். வாக்கிங் செய்வதை விட இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரை அதிக உடல் எடைக் குறைவு ஏற்படும்.

மூட்டு வலி
தினமும் ஜாக்கிங் செய்பவர்களுக்கு மற்றவர்களை விட 25% குறைவாக தான் மூட்டு வலிப் பிரச்சனைகள் வருகிறது.

வளர்ச்சிதை மாற்றம்
ஜாக்கிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்தால், உங்கள் நுரையீரல் நன்கு விரிவடையும், இரத்த ஓட்டம் சீராகும், உடற்திறனில் நல்ல மாற்றம் தெரியும்.

இதயம்
தினமும் குறைந்தது ஒரு கி.மீ தூரம் ஜாக்கிங் சென்று வந்தீர்கள் என்றால் இதயப் பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் 50% வரை குறையும்.

நீரிழிவு நோய்
குறைந்தது வாரம் ஐந்து நாட்களாவது அரைமணி நேரம் ஜாக்கிங் செய்துவந்தால் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

எலும்புகள்
தினமும் ஜாக்கிங் செய்வதனால் உங்கள் எலும்புகள் வலுமை அடைகின்றன. இதனால் முதுமையில் ஏற்படும் மூட்டுப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

உறக்கம்
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதனால் தூக்கமின்மை குறையும், நல்ல உறக்கம் வரும்.

ஞாபக சக்தி
ஜாக்கிங் செய்வதனால் உங்கள் மூளை சுறுசுறுப்பு ஆகிறது, இதனால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
