வாய் துர்நாற்றத்தைத் தவிர்ப்பதற்கான வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது பலரும் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இத்தகைய பிரச்சனை பலருக்கும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கும். ஆம், வாய் துர்நாற்றம் இருந்தால், யாரிடமும் அருகில் சென்று பேச முடியாது.

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்...

இதற்கு முக்கிய காரணம் பழக்கவழக்கங்கள் தான். தவறான பழக்கவழக்கங்களால் வாய் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் காதலி/மனைவியின் அருகில் சென்று நிம்மதியாக ரொமான்ஸ் கூட செய்ய முடியாத சூழலில் உள்ளோம்.

வாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான 'மௌத் ஃப்ரஸ்னர்ஸ்'...

எனவே இப்படி கப்படிக்கும் வாய் துர்நாற்றத்தைப் போக்க ஒருசில எளிய வழிகளை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை சரிசெய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறட்சியான வாய்

வறட்சியான வாய்

வாய் எப்போதும் வறட்சியுடன் இருந்தால், அதனால் வாய் துர்நாற்றம் வீசும். எனவே அவ்வப்போது தண்ணீர் குடித்தவாறு இருக்க வேண்டும். மேலும் எதை சாப்பிட்ட உடனேயும் வாயை நன்கு நீரினால் கொப்பளிக்க வேண்டும்.

சூயிங் கம்

சூயிங் கம்

சர்க்கரை இல்லாத சூயிங் கம்மை வாயில் போட்டு மென்றவாறு இருந்தால், வாயில் எச்சிலின் சுரப்பு அதிகரித்து, வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

பல் துலக்கும் முறை

பல் துலக்கும் முறை

தினமும் இரண்டு வேளை பற்களை துலக்குவதுடன், மறக்காமல் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நாக்கில் சேரும் வெள்ளை படமே கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

வெங்காயம் மற்றும் பூண்டு

வெங்காயம் மற்றும் பூண்டு

வெங்காயம் மற்றம் பூண்டு போன்றவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும். குறிப்பாக பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே சாப்பிட்டாலும், வாயை உடனே கழுவிட வேண்டும்.

வாயை கொப்பளிக்கவும்

வாயை கொப்பளிக்கவும்

எந்த ஒரு உணவை உட்கொண்டாலும், அதனை உட்கொண்ட பின்னர் வாயை நீரினால் நன்கு கொப்பளிக்க வேண்டும். இதனால் பல் இடுக்குகளில் சிக்கிய உணவுத்துகள் வெளிவந்து, வாய் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.

பல் மருத்துவரை அணுகவும்

பல் மருத்துவரை அணுகவும்

வருடத்திற்கு இரண்டு முறை தவறாமல் பல் மருத்துவரை அணுகி, பற்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் பற்களில் உள்ள சொத்தையும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Ways To Avoid Bad Breath

Bad breath is one something that nobody appreciates. Here are some of the ways to avoid bad breath.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter