வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்ப்பதால் பெறும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே தலைத்தெறித்து ஓடுவோர் பலர். ஆனால் அந்த பாகற்காயை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதனால் தற்போதைய மக்கள் அதிகம் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். அந்த அளவில் பாகற்காயில் சத்துக்களானது நிறைந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், கட்டுப்பாட்டுடன் வைத்துக கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கான சில பாகற்காய் ரெசிபிக்கள்!!!

அதுமட்டுமின்றி, வேறு பல நன்மைகளும் பாகற்காயில் அடங்கியுள்ளது. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்

கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்துவிடும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பாகற்காயை உட்கொண்டு வாருங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

இன்றைய காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி மக்களிடையே மிகவும் குறைவாக உற்ளளது. ஆனால் பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அடிக்கடி பிடிக்கும் சளி, காய்ச்சலில் இருந்து விடுதலைத் தரும்.

புற்றுநோய்

புற்றுநோய்

பாகற்காயில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளது என்பது தெரியுமா? எனவே பாகற்காயை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

எடை குறைவு

எடை குறைவு

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், உண்மையிலேயே பாகற்காயை எடையைக் குறைக்க உதவும். அதற்கு அதில் உள்ள பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் முக்கிய காரணம்.

வயிற்றுப்புழுக்கள்

வயிற்றுப்புழுக்கள்

பாகற்காயில் அந்தல்மின்டிக் உட்பொருட்கள் உள்ளதால், இவை குடலில் உள்ள புழுக்களை அழிக்கும். மேலும் உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்ற உதவும்.

நீரிழிவு

நீரிழிவு

சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் ஜூஸை குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், மருந்து மாத்திரைகளை நாளடைவில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வராது.

உங்களுக்கு பாகற்காய் குறித்து வேறு ஏதேனும் நன்மைகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Amazing Benefits Of Bitter Gourd

Check out the 6 Amazing Benefits Of Bitter Gourd in this article today. Read on to know more about health benefits of bitter gourd.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter