உயிருக்கு உலை வைக்கும் மார்டன் ஃபேஷன் உபகரணங்கள் - எச்சரிக்கை ரிப்போர்ட்!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய இளைய தலைமுறை ஆரோக்கியமாக இருக்கிறார்களோ இல்லையோ, (போலி) ஆடம்பரமாகவும், மார்டன் மங்கைகளாகவும் தான் உலா வருகின்றனர். இந்த ஃபேஷன் பகட்டு உங்கள் உடல் நலத்திற்கு வேட்டு வைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

உங்க உடம்பு நல்லா இருக்கனும்னா இதெல்லா கண்ண மூடிட்டு தூர தூக்கி எரிஞ்சிடுங்க!!!

ஹை ஹீல்ஸ் அணிவதால் பிரசவ கால பிரச்சனைகளும், இடுப்பு பிரச்சனைகள் வரும் என்பது பெரும்பாலானோர் அறிந்தது தான். ஆனால், இறுக்கமான ஜீன்ஸ் அணிவதனாலும், அதிகமான அலங்காரம், ஹேர் கலரிங் போன்றவையும் கூட உங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது.

எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்!!!

அழகு சாதனப் பொருட்களின் மூலமாகவும் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு காரணம் அதில் கலக்கப்படும் இரசாயனங்கள் தான். இனி, நீங்கள் பயப்படுத்தும் ஃபேஷன் உபகரணங்களினால் ஏற்படும் உடல்நல தீங்குகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்...

மிகவும் விஷத்தன்மை கொண்ட மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறுக்கமான ஜீன்ஸ்

இறுக்கமான ஜீன்ஸ்

"ஸ்கின் ஃபிட்" (Skin Fit) ஜீன்ஸ் அணிவது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாக இருக்கின்றது. இப்படி இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதனால் ஆண்களுக்கு விதைப்பை பிரச்சனைகளும், பெண்களுக்கு ஈஸ்ட் தொற்றுகளும் ஏற்படுகிறது. இதனால் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டம் குறைகிறது. இரத்த ஓட்டம் குறைவதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மையும், ஆண்மையும் குறைய வாய்ப்புகள் இருக்கின்றது.

ஹை ஹீல்ஸ்

ஹை ஹீல்ஸ்

பொதுவாகவே பெண்களுக்கு ஆண்களை விட எலும்பு விரைவாக வலுவிழக்க ஆரம்பித்துவிடும். அதிலும், ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு இது தாறுமாறாக அதிகரிக்கும். ஹை ஹீல்ஸ் அணிவதனால், இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன.

ஹை ஹீல்ஸை மாற்றாக இப்படி அணியலாம்...

ஹை ஹீல்ஸை மாற்றாக இப்படி அணியலாம்...

நீங்கள் உங்களை உயரமாக காட்டிக் கொள்ள ஹை ஹீல்ஸ் அணிகிறீர்கள் என்றால், முடிந்த வரை சமநிலையாக இருக்கும் ஹை ஹீல்ஸ் காலணிகளை தீர்வு செய்யலாம். மற்றும் பாதத்திற்கு அழுத்தம் தராத காலணிகளை தீர்வு செய்து அணிவது இடுப்பு வலி ஏற்படாமல் இருக்க உதவும்.

ஹேர் கலரிங்

ஹேர் கலரிங்

சந்தையில் இயற்கையான "ஹேர் டை" என்று விற்கப்படும் பெரும்பாலான பொருட்கள் ரசாயன கலப்போடு தான் தயாரிக்கப்படுகின்றது. இதனால், முடி உதிர்தல், சரும கோளாறுகள், அழற்சிகள் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கின்றது.

காதணிகள்

காதணிகள்

ஃபேஷன் என்ற பெயரில் எடை அதிகமான, பெரிய கம்மல்கள், காதணிகள் அணிவது காதின் மடலை பாதிக்கிறது.

அதிகப்படியான மேக்-அப்

அதிகப்படியான மேக்-அப்

தற்போது எல்லாம் ஷாப்பிங் மால்களுக்கு போகவே, ஏதோ திருமணத்திற்கு போவதை போல மேக்-அப் செய்கின்றனர் பெண்கள். இப்போது பெண்கள் பயன்படுத்தும், லிப்ஸ்டிக், காஜல், மஸ்காரா, ரோஸ் பவுடர், ஐ-லைனர் போன்ற அனைத்துமே 100% ரசாயனத்தின் மூலம் தயாரிக்கப்படுவது. இதை நீங்கள் தினந்தோறும் உபயோகப்படுதினால் விழி வெண்படல அழற்சி, கண்ணில் சீழ்ப்புண், தொற்றுநோய், ஒவ்வாமை, சருமத்தில் நச்சுத்தன்மைப் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects Of High Fashion On Your Health

Do you know about the side effects of high fashion on your health? read here.
Story first published: Tuesday, April 21, 2015, 10:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter