இந்த பழக்கவழக்கங்கள் தான் உங்கள் வாழ்க்கையையே பாழாக்குகிறது!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் தினமும் ஏதேனும் ஒரு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அதற்கு காரணம் உங்களின் அன்றாட பழக்கவழக்கங்கள் தான். உங்களின் பழக்கவழக்கங்களுக்கும், நோய்க்கும் தொடர்புள்ளது. இதனால் பெரியோர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சிறு வயதிலேயே பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்!!!

குறிப்பாக பழக்கவழக்கங்களால் முதலில் உடல் பருமன் ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. எனவே நீங்கள் எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையாலும் கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில், ஒருசில பழக்கங்களைக் கைவிட வேண்டும். இங்கு உங்களின் உடல் நலத்தை பாதித்து, உங்கள் வாழ்க்கையையே பாழாக்கும் பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உடனே கைவிடுங்கள்.

அன்றாட சமையலில் ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுப் பழக்கங்கள்

உணவுப் பழக்கங்கள்

ஒருவரின் உடல்நலம் முதலில் பாதிக்கப்படுவது, அவரின் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் தான். உணவுப் பழக்கங்கள் மோசமாக இருக்கும் போது, அவருக்கு புற்றுநோய், இதய நோய், நீரிழிவு, போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இதன் காரணமாக வாழ்நாளின் அளவும் குறையும்.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

நீங்கள் புகைப்பிடிப்பது உங்கள் உடல்நலத்தைக் கெடுப்பதோடு, உங்கள் அருகில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் தான் பாதிக்கும். சிகரெட்டில் இருந்து வெளிவரும் புகையை சுவாசிப்பதால், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட நேரிடுகிறது. அதிலும் புகைப்பிடிப்போருக்கு என்றால் நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் இதர புற்றுநோயால் பாதிக்கப்படக்கூடும். எனவே உடனே இப்பழக்கத்தைக் கைவிடும் முயற்சியில் உடனே ஈடுபடுங்கள்.

மது அருந்துதல்

மது அருந்துதல்

மது அருந்துவதால், உடலில் HDL அளவு அதிகரித்து, இதய நோயின் தாக்கம், மார்பக புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதிலும் நீங்கள் அன்றாடம் குடிப்பவராயின், உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே உலை வைத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். ஆகவே இப்பழக்கத்தையும் உடனே விட்டுவிடுங்கள்.

உடல் பருமன்

உடல் பருமன்

இக்காலத்தில் உண்ணும் உணவிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாததால், உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். உலகில் 70% மக்க்ள உடல் பருமனால் கஷ்டப்படுகின்றனர். ஒருவர் உடல் பருமனால் கஷ்டப்பட்டால், அவருக்கு புற்றுநோய், இதய நோய் மற்றும் வாழ்க்கைக்கே உலை வைக்கும் பிரச்சனையால் கஷ்டப்படக்கூடும். எனவே ஜங்க் உணவுகளை உட்கொள்ளாமல், அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

சோம்பேறித்தனம்

சோம்பேறித்தனம்

ஒருவரின் வாழ்க்கையை அழிப்பதில் சோம்பேறித்தனமும் முக்கிய காரணியாக உள்ளது. அதுவும் நாள்பட்ட பிரச்சனைகளான இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் போன்றவற்றைக் கொண்டவர்கள், தனது சோம்பேறித்தனத்தால் போதிய உடல் உழைப்பு கொடுக்காமல் இருந்தால், அதன் காரணமாக உடல் பருமன், இதய நோய், நீரிழிவு, பக்கவாதம் போன்றவற்றால் விரைவில் பாதிக்கப்படக்கூடும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

உலகில் பல மில்லியன் மக்கள் மன அழுத்தத்திற்கு உட்பட்டு, அதன் காரணமாக உடல் பருமன், மாரடைப்பு, சர்க்கரை நோய், ஆஸ்துமா போன்றவற்றிற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி, மன அழுத்தம் ஒருவருக்கு அதிகமானால், அதனால் ஞாபக மறதி ஏற்படுவதோடு, நாளடைவில் தன்னை வெறுத்து, உலகில் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யத் தூண்டும். எனவே மன அழுத்தம் இருந்தால், தனிமையைத் தவிர்த்து, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு, மனதை அமைதியாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

ஆம், ஒருவருக்கு போதிய அளவில் தூக்கம் இல்லாவிட்டாலும், அது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும். குறிப்பாக தூக்கமின்மை இல்லாவிட்டால், இரத்த அழுத்தம், இதய நோய், கொலஸ்ட்ரால் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். எனவே தினமும் ஒருவருக்கு 8 மணிநேர தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Lifestyle Habits That Cause Diseases

Did you know that the lifestyle you lead can kill you? Well, here are some of the lifestyle habits that causes diseases. You might want to take a look:
Please Wait while comments are loading...
Subscribe Newsletter