ஏன் தூங்கும் போது குறட்டை வருகிறது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகில் 90 சதவீத மக்கள் குறட்டையால் அவஸ்தைப்படுகிறார்கள். குறட்டை வருவதற்கு பின்னணியில் ஏராளமான காரணங்கள் உள்ளன. அறிவியல்பூர்வமாக, சுவாசப்பாதையின் தசைகள் அளவுக்கு அதிகமாக ரிலாக்ஸ் அடையும் காற்று உள்ளே சென்று வெளிவருவதால் குறட்டை வருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறட்டை விடுவதால் எவ்வித கடுமையான பிரச்சனையையும் சந்திக்காவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் குறட்டை விடுவதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும் மற்றும் அருகில் படுப்போரின் தூக்கமும் போகும். இப்போது தூங்கும் போது குறட்டை வருவதற்கான வேறு சில காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருந்துகள்

மருந்துகள்

பெரும்பாலான மருந்துகள் ஒரு குறிப்பிட்ட பக்க விளைவுகளைக் கொண்டிருக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன் தூக்க மாத்திரைகள் மற்றும் ஹிசுட்டமின் மருந்துகளை எடுத்தால், அதனால் குறட்டையானது அதிக சப்தத்துடன் வரும்.

உடல் பருமன்

உடல் பருமன்

உடல் பருமனால் பல வழிகளில் வாழ்க்கையை பாதிக்கும். அதில் இதய நோய், பக்கவாதம், கருத்தரிப்பதில் பிரச்சனை மற்றும் தூக்க குறைபாடுகளான குறட்டை விடுதல் போன்றவை அடங்கும். குறிப்பாக ஒருவருக்கு கழுத்து சிறியதாகவும், அவ்விடத்தில் கொழுப்புக்கள் அதிகமாகவும் இருந்தால், குறட்டை வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இரவு உணவு

இரவு உணவு

இரவில் வேகமாக உணவை உட்கொள்வோரை விட, தாமதமாக வயிறு நிறைய உட்கொள்வோருக்குத் தான், அதிக அளவில் குறட்டை வரக்கூடும்.

மது அருந்துதல்

மது அருந்துதல்

மது அருந்துவதும் குறட்டை வருவதற்கான காணங்களில் ஒன்று. ஆல்கஹால் குடித்த உடனேயே தூங்குவதற்கு பதிலாக, இரவில் தூங்குவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே ஆல்கஹால் பருகலாம். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக குறட்டை பிரச்சனையைக் குறைக்கலாம்.

அடிநாச் சதை

அடிநாச் சதை

உங்கள் குழந்தைகள் குறட்டைவிட்டால், பெற்றோர்கள் உடனே அவர்களுக்கு அடிநாச் சதை சோதனையை எடுத்துப் பார்க்க வேண்டும். அடிநாச் சதை வீங்கியிருந்தால் தான் குழந்தைகளுக்கு குறட்டை வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே குறட்டை விடும் உங்கள் குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதியுங்கள்.

தூங்கும் நிலை

தூங்கும் நிலை

மென்மையான தலையணை மற்றும் நேராக படுப்பது போன்றவையும் குறட்டை வருவதற்கான காரணங்களுள் ஒன்று. எனவே உங்களுக்கு குறட்டை வந்தால், தலையணை இல்லாமல் தூங்குங்கள். இல்லாவிட்டால், இடதுபக்கமாக தூங்குங்கள்.

மூக்கடைப்பு

மூக்கடைப்பு

உங்களுக்கு அடிக்கடி மூக்கடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை வரும். அதிலும் உங்கள் மூக்கைச் சுற்றி சளி அதிகம் தேங்கியிருந்தால், சுவாச பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். சுவாச பிரச்சனைகள் இருந்தால், குறட்டை கண்டிப்பாக வரும். எனவே தேங்கியுள்ள சளியை வெளியேற்ற முயற்சி செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why We Snore In Our Sleep

Do you know why you snore in your sleep? Here are some of the medical reasons why you utter that nasty disturbing noise. You must take a look.
Story first published: Friday, October 30, 2015, 15:31 [IST]
Subscribe Newsletter