முள்ளங்கியை ஏன் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கி வெள்ளை, சிவப்பு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. பலரும் முள்ளங்கி சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை ஏற்படும் என்று அதனை அடிக்கடி சமைத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் முள்ளங்கியில் எண்ணற்ற ஊட்டசசத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

இங்கு முள்ளங்கியை ஏன் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேலாவது முள்ளங்கியை தவறாமல் சமைத்து சாப்பிடத் தொடங்குங்கள்.

உருளைக்கிழங்கு பிரியர்களே! உருளைக்கிழங்கு சாற்றின் மகத்துவத்தை படிச்சு பாருங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ-கெமிக்கல்கள் மற்றும் ஆந்தோசையனின்கள் உள்ளது. அதுமிட்டுமின்றி, அதில் உள்ள வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்பட்டு, ப்ரீ-ராடிக்கல்கள் டி.என்.ஏ-வை பாதித்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

இரத்த அழுத்தத்தை சீராக்கும்

இரத்த அழுத்தத்தை சீராக்கும்

முள்ளங்கியில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொருள் உள்ளது. முக்கியமாக இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், முள்ளங்கியை உட்கொண்டு வந்தால், உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சமநிலைப்படுத்தப்பட்டு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

கணையம் தான் இன்சுலின் ஹார்மோனை சுரந்து, உடலில் குளுக்கோஸில் அளவைப் பராமரிக்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகளின் உடலில் இந்த இன்சுலின் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும். இதனால் இவர்கள் சர்க்கரை மிகுந்த உணவுகளையோ அல்லது மாவுச்சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளக்கூடாது. ஆனால் முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாகவும் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் சுரப்பதால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

சளி மற்றும் இருமலைத் தடுக்கும்

சளி மற்றும் இருமலைத் தடுக்கும்

நீண்ட நாட்களாக சளி அல்லது இருமலை சந்தித்து வருபவர்கள், முள்ளங்கியை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சளியை முறிக்கும் பொருள், நெஞ்சில் தேங்கியுள்ள சளியை முறித்து, உடனடி நிவாரணத்தைத் தரும். மேலும் முள்ளங்கி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

பெரும்பாலான மக்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் நார்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இப்பிரச்சனையைத் தடுக்கலாம் மேலும் முள்ளங்கி செரிமான அமிலத்தை சுரந்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும். இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் எடை குறையும்

உடல் எடை குறையும்

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள முள்ளங்கியை உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். அதிலும் 100 கிராம் வேக வைக்காத முள்ளங்கியில் வெறும் 16 கலோரிகள் தான் உள்ளது. எனவே எடையைக் குறைப்போருக்கு இது ஒரு சிறந்த உணவுப் பொருள்.

ஆரோக்கியமான சிறுநீரகங்கள்

ஆரோக்கியமான சிறுநீரகங்கள்

முள்ளங்கி சிறுநீரக கற்கள் உருவாவதை மட்டுமின்றி, இருந்தாலும் அவற்றைக் கரைக்கவும் உதவும். உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், தினமும் 50மிலி முள்ளங்கி சாற்றினை நீருடன் கலந்து குடித்து வந்தால், கற்கள் கரைந்துவிடும். அதுமட்டுமின்றி, முள்ளங்கியை உட்கொண்டு வந்தால், சிறுநீரக தொற்றுகள் தடுக்கப்படுவதோடு, அதில் உள்ள பொட்டாசியம் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, சிறுநீரகங்களும் சுத்தமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons To Eat Radish

Here are some reasons to eat radish. Take a look..