சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

சுய இன்பம் காண்பது ஓர் சாதாரண நிகழ்வு தான். இந்த சுய இன்பம் உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவு எனலாம். இதை ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அனுபவிப்பார்கள். சுய இன்பம் குறித்து சில தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது.

நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

இதனால் சுய இன்பத்தை அனுபவிப்பவர்கள் அஞ்சுகிறார்கள். என்ன தான் சுய இன்பம் காண்பதால் உடலுக்கு நன்மை விளைந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக செய்யும் போது, நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே அளவாக சுய இன்பத்தை அனுபவித்து, நன்மைகளைப் பெறுங்கள்.

சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட..

இப்போது சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகப்பரு வரும்

முகப்பரு வரும்

சுய இன்பம் கண்டால் முகப்பரு வரும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் அது தவறு. உண்மையில் முகப்பருவானது எண்ணெய் பசை சருமமாக இருந்தால் தான் வருமே தவிர, சுய இன்பம் கண்டால் அல்ல.

இளம் வயதினருக்கு மட்டுமே சுய இன்பம்

இளம் வயதினருக்கு மட்டுமே சுய இன்பம்

சுய இன்பம் என்பது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடிய ஓர் பாலியல் செயல். சர்வே ஒன்றில், 70-94 சதவீத இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் சுய இன்பம் காண்பதாகவும், வயது அதிகரிக்க அதிகரிக்க, சிலருக்கு இந்த உணர்வு குறையும். ஆனால் பலரும் இன்னும் வயதான காலத்திலும் அனுபவிக்கின்றனர். எனவே இது ஒவ்வொருவரின் உடல் சக்தியைப் பொறுத்ததே தவிர, இளம் வயதில் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

சுய இன்பம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

சுய இன்பம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சுய இன்பம் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதை அளவாக மேற்கொண்டால் மட்டுமே. அதையே அளவுக்கு அதிகமாக செய்து வந்தால், உடல் ஆரோக்கியம் பாழாகும்.

ஆண்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள்

ஆண்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள்

ஆண்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள் என்று பலர் நினைக்கின்றனர். மேலும் சர்வே ஒன்றிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக சுய இன்பம் காண்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் உண்மையில் இதுக்குறித்து என்ன தான் சர்வே நடத்தினாலும், பெண்கள் தாம் சுய இன்பம் காண்பதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். ஏனெனில் நமது சமூகத்தில் சுய இன்பம் குறித்து தவறான கண்ணோட்டம் உள்ளதால், பெண்கள் அதை மறைக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் அதிகமாக சுய இன்பம் காணமாட்டார்கள்.

தினமும் சுய இன்பம் காண்பது கெட்டது

தினமும் சுய இன்பம் காண்பது கெட்டது

தினமும் சுய இன்பம் காண்பது கெட்டதா? சொல்லப்போனால் அதிகமாக சுய இன்பம் காண்பதற்கும், சுய இன்பத்தை கட்டாயம் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வுக்கும் உள்ள வேறுபாட்டை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை முதலில் புரிந்து கொண்டால், உண்மை உங்களுக்கே புரிந்துவிடும். உதாரணமாக, சிலர் தினமும் எவ்வித உணர்வும் இல்லாமல் சுய இன்பம் கண்டால், அதனால் தீங்கை சந்திக்க நேரிடும். அதுவே உணர்ச்சி அதிகமாக இருந்து சுய இன்பத்தைக் கண்டால், அதனால் எவ்வித தீமையையும் சந்திக்க வாய்ப்பில்லை.

திருமணமாகாதவர்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள்

திருமணமாகாதவர்கள் மட்டும் தான் சுய இன்பம் காண்பார்கள்

இதுவும் மக்களிடையே உள்ள சுய இன்பம் பற்றிய ஓர் தவறான கருத்து. திருமணமான பல ஆண்கள் சுய இன்பம் காண்பார்கள். ஆனால் தன் துணை முன் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

ஒரு குறிப்பிட்ட மக்கள் தான் சுய இன்பம் காண்பார்கள்

ஒரு குறிப்பிட்ட மக்கள் தான் சுய இன்பம் காண்பார்கள்

சுய இன்பம் காண்பதற்கு எவ்வித குணமும் தேவையில்லை. இது ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு பாலியல் உணர்ச்சி அதிகமாக இருந்து, அதை வெளிப்படுத்தும் ஓர் விதம் தான் சுய இன்பம் காண்பது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சுய இன்பத்திற்கும், குணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

சுய இன்பம் கண்டு விந்தணுவை வீணாக்குகிறார்கள்

சுய இன்பம் கண்டு விந்தணுவை வீணாக்குகிறார்கள்

பொதுவாக ஆண்களின் விதைப்பையில் விந்தணு நிரம்பிவிட்டால், தானாகவே அது வெளிவந்துவிடும். என்ன தான் அதை கட்டுப்படுத்த நினைத்தாலும், கண்டிப்பாக நிறுத்த முடியாது. அதேப் போல் உணர்ச்சி அதிகம் இருந்தால் தான் சுய இன்பம் காண முடியும். எனவே சுயஇன்பத்தினால் விந்தணு வீணாகிறது என்று நினைக்க வேண்டாம். சொல்லப்போனால் விந்தணுக்களானது வெளியேப்படக்கூடியவை என்பதால் தான் உங்களுக்கு பாலியல் உணர்வே ஏற்படுகிறது. மேலும் நீங்கள் எவ்வளவு முறை சுய இன்பம் கண்டாலும், விதைப்பையில் விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Myths about Masturbation

Here are some Myths about Masturbation. Take a look...
Story first published: Monday, October 19, 2015, 13:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter