பால் அல்லது தயிர் - இவற்றில் எது ஆரோக்கியமானது?

Posted By:
Subscribe to Boldsky

மக்களுள் சிலர் பாலை விரும்பி குடிப்பார்கள். இன்னும் சிலரோ தயிரை விரும்பி சாப்பிடுவார்கள். இவை இரண்டுமே ஆரோக்கியமானவை தான். இருப்பினும் இவை இரண்டில் எது ஆரோக்கியமானது என்று உங்களுக்கு தெரியுமா?

அன்றாட உணவில் தயிர் சேர்ப்பதால் கிடைக்கும் அருமையான 11 நன்மைகள்!!!

இவை இரண்டுமே சத்து மிக்கவை தானே என்று பலரும் சொல்லலாம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணரான நைனி என்பவர், இவற்றில் தயிர் தான் சிறந்தது என்று சொல்கிறார். அது எப்படி? ஏன்? என்று உங்கள் மனதில் பல கேள்விகள் எழும். உங்கள் கேள்விகளுக்கு பதில் இதோ!

பாதாம் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் தயிர் சிறந்தது?

ஏன் தயிர் சிறந்தது?

* எளிதில் செரிமானமாகும்.

* தயிரில் நல்ல பாக்டீரியா (புரோபயோடிக்ஸ்) உள்ளது.

* குடல் சுத்தமாகும்.

* வயிற்று பிரச்சனைகள் குணமாகும்.

* சிறுநீர் பாதை தொற்றுகள் நீங்கும்.

* எலும்புகளுக்கு நல்லது.

அப்படியெனில் பால் கெட்டதா?

அப்படியெனில் பால் கெட்டதா?

கண்டிப்பாக இல்லை. ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. ஆனால் தயிருடன் பாலை ஒப்பிடுகையில், தயிர் தான் சிறந்தது என்கிறார்.

அதிக கொழுப்புள்ள தயிரை விட குறைவான கொழுப்பு சிறந்ததா?

அதிக கொழுப்புள்ள தயிரை விட குறைவான கொழுப்பு சிறந்ததா?

ஆம், ஒருவேளை நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், குறைவான கொழுப்புள்ள தயிர் தான் சிறந்தது. அதிலும் கொழுப்பு நீக்கப்படாத 100 கிராம் தயிரில் 60 கலோரிகள் உள்ளன. ஆனால் கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் 22 கலோரிகள் உள்ளது.

ஒரு நாளைக்கு எவ்வளவு தயிர் எடுத்துக் கொள்ளலாம்?

ஒரு நாளைக்கு எவ்வளவு தயிர் எடுத்துக் கொள்ளலாம்?

ஒரு நாளைக்கு 250 மிலி தயிர் எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால், அது நீங்கள் எடுக்கும் மற்ற உணவுகளைப் பொருத்து வேறுபடும்.

தயிர் சாப்பிட எது சிறந்த காலம்?

தயிர் சாப்பிட எது சிறந்த காலம்?

தயிரை மதியம் 2 மணிக்கு முன் சாப்பிடுவது தான் சிறந்தது.

தயிரை யார் சாப்பிடக்கூடாது?

தயிரை யார் சாப்பிடக்கூடாது?

ஆர்த்ரிடிஸ், ஆஸ்துமா, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் மற்றும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தயிரை தவிர்க்க வேண்டும். ஆனால் பாலுடன் ஒப்பிடுகையில் தயிரில் லாக்டோஸ் குறைவாக இருப்பதால், லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்களுள் சிலர் எடுத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Milk or Curd – Which Is Healthier?

There are people who love dahi or curd and there are those who love doodh or milk. But if you had to pick the healthier option, there is a clear winner. Nutritionist Naini Setalvad reveals which one you should choose and why.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter