மருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் சாப்பிடக்கூடாத மாத்திரைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மாத்திரைகள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஏனெனில் தற்போது நோய்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில், எந்த ஒரு பிரச்சனைக்கும் கை மருத்துவம் போல், மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகிறோம்.

உதாரணமாக, காய்ச்சல் வந்தால், உடனே பாராசிட்டமல் வாங்கி போடுவோம். ஆனால் இப்படி காய்ச்சல் வருவது போல் உணரும் போதெல்லாம் போட்டால், அதனால் பிற்காலத்தில் கடுமையான பக்க விளைவை சந்திக்கக்கூடும்.

குறிப்பாக பெண்கள் எந்த ஒரு மாத்திரையையும் மருத்துவரின் பரிந்துரையின்றி எடுப்பதை தவிர்க்க வேண்டும். இங்கு பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய மாத்திரைகளையும், அப்படி எடுப்பதால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிமிசுலைடு (Nimesulide)

நிமிசுலைடு (Nimesulide)

இந்த மாத்திரையானது கடுமையான தலை வலி, மாதவிடாய் வலியின் போது எடுக்கக்கூடிய ஒன்று. இதனை நீண்ட நாட்கள் மருத்துவர் பரிந்துரைக்காமலேயே எடுத்து வந்தால், அதனால் சிறுநீரக பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

பாராசிட்டமல் (Paracetamol)

பாராசிட்டமல் (Paracetamol)

இந்த மாத்திரை தான் பெரும்பாலான மக்களால் சாப்பிடப்படும் ஒன்று. மேலும் இந்த மாத்திரையானது அனைத்து பெண்களின் பையிலும் இருக்கும். இது தலை வலி மற்றும் காய்ச்சலின் போது எடுக்கக்கூடியது. இந்த மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், கல்லீரல் பாதிக்கப்பட்டு பெரும் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.

டார்ட் மாத்திரை (Dart Tablet)

டார்ட் மாத்திரை (Dart Tablet)

சோடியம் நெட்ரேட் நிறைந்த டார்ட் மாத்திரைகளானது தலை வலி மற்றும் உடல் வலிக்காக எடுக்கக்கூடியது. இது மிகவும் ஆபத்தானது. இதனை தடை செய்துவிட்டாலும், இன்னும் இது கடைகளில் கிடைக்கிறது. இதனை பெண்கள் அடிக்கடி எடுத்து வந்தால், கர்ப்ப காலத்தில் மிகவும் ஆபத்தை சந்திக்க வேண்டி வரும்.

பினா ஸ்டெராய்டு (Fina Steroid)

பினா ஸ்டெராய்டு (Fina Steroid)

இந்த வகையான மாத்திரையானது கால்நடைகளின் தசைகளை வளர்க்கவும், பசியை தூண்டவும் உதவும். எனவே பாடிபில்டர்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால் இதனை பெண்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது சிறுநீரகங்களை பாதிப்பதோடு, கருச்சிதைவை ஏற்படுத்தும்.

வைட்டமின் ஏ மாத்திரைகள்

வைட்டமின் ஏ மாத்திரைகள்

வைட்டமின் ஏ மாத்திரைகளை பெண்கள் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் போதும், பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகளின் போதும், ஈஸ்ட தொற்றுகளின் போதும் எடுப்பார்கள். ஆனால் இதனை பெண்கள் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது, சோர்வு, பசியின்மை, வயிற்றுக்கோளாறுகள் மற்றும் கருச்சிதைவை ஏற்படுத்தும்.

வைட்டமின் சி மாத்திரைகள்

வைட்டமின் சி மாத்திரைகள்

வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த நாளங்கள், தசைகள் மற்றும் எலும்புகளை வலிமையாக பராமரிக்க உதவும். இந்த மாத்திரைகளை சளி மற்றும் இருமலின் போதும் எடுப்பார்கள். ஆனால் இதனை பெண்கள் அளவுக்கு அதிகமாக எடுத்தால், கருச்சிதைவை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicines A Woman Should Avoid Consuming

Science has given a lot of privileges to humanity and medicines are the best as they rid us all of pain, angst or any other kind of physical discomfort.
Story first published: Wednesday, May 6, 2015, 17:04 [IST]