உடல்நல பிரச்சனைகளுக்கான சில பாரம்பரிய வைத்தியங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மருத்துவத் துறையில் எவ்வளவு முன்னேற்றங்கள் இருந்தாலும், நம் பாரம்பரிய வைத்தியங்களுக்கு முன் அவற்றை ஒப்பிட முடியாது. கெமிக்கல் கலந்து விற்கப்படும் மருத்து மாத்திரைகளை உடல் நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்தினால், அதனால் ஆரோக்கியம் மேம்படுகிறதோ இல்லையோ சிறு பக்க விளைவுகளையாவது சந்திக்க நேரிடும்.

ஆனால் நம் பாரம்பரிய இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றினால், உடல் ஆரோக்கியம் மெதுவாக தேறினாலும், அதனால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும். இங்கு நாம் அன்றாடம் சந்திக்கும் சில பிரச்சனைகளும், அதற்கான பாரம்பரிய வைத்தியங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொண்டைக் கட்டு

தொண்டைக் கட்டு

தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் சிரமப்படுபவர்கள், கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து, அதில் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்து வர சரியாகும்.

மூலம்

மூலம்

மூல பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தால், வாரம் இரண்டு முறை கருணைக்கிழங்கை உணவில் சேர்த்து வர குணமாகும்.

சளி

சளி

சளியால் கஷ்டப்படுபவர்கள், 1 பச்சை மிளகாயுடன், 10 துளசி இலைகளை சேர்த்து சாப்பிட்டால், விரைவில் போய்விடும்.

தொப்பை

தொப்பை

வெள்ளை வெங்காயத்தை நெய் சேர்த்து வதக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்து காலையிலும், மாலையிலும் 1 டீஸ்பூன் உட்கொண்டு வந்தால், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

வயிற்றுப்புழு

வயிற்றுப்புழு

துவரம் பருப்பு வேக வைத்த நீரை ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது வெல்லம் சேர்த்து கலந்து, ஒரு வாரம் குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.

மூட்டு வலி

மூட்டு வலி

மூட்டு வலி உள்ளவர்கள், சுக்கை நீர் சேர்த்து அரைத்து மூட்டுகளில் தடவி வந்தால், வலி குறையும்.

எடை அதிகரிக்க

எடை அதிகரிக்க

கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர, மெலிந்த உடல் பருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies: Traditional Cures For Health Ailments In Tamil

Here are some traditional cures for health ailments. Take a look...
Story first published: Saturday, October 31, 2015, 16:00 [IST]
Subscribe Newsletter