வறட்டு இருமல் பாடாய் படுத்துகிறதா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

குளிர் அல்லது மழைக்காலம் ஆரம்பித்தாலே, காய்ச்சல், சளி, இருமல், வறட்டு இருமல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு என்று பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இதில் பலரும் இரவு நேரங்களில் அனுபவிப்பது வறட்டு இருமலைத் தான். வறட்டு இருமல் ஆரம்பித்துவிட்டால், இரவில் தூக்கத்திற்கு குட்-பை சொல்லிவிட வேண்டியது தான். அந்த அளவில் ஒருவரை வறட்டு இருமலானது பாடாய் படுத்திவிடும்.

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்!!!

இருமலுக்கும், வறட்டு இருமலுக்கும் வித்தியாசம் உள்ளது. வறட்டு இருமலானது சளி அல்லது கோழை உற்பத்தியின் மூலம் ஏற்படுவதில்லை. இந்த வகை இருமல் மூக்கு அல்லது தொண்டையில் ஏற்பட்ட வைரஸ் நோய்த்தொற்றின் மூலம் உருவாவது. வறட்டு இருமல் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் தொடர்ச்சியாக இருமல் வரும்.

இருமலில் இருந்து உடனடி தீர்வு பெற 10 எளிய டிப்ஸ்...

இந்த வறட்டு இருமலுக்கு தீர்வே இல்லையா என்று கேட்கலாம். நிச்சயம் இதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே தீர்வு காண முடியும். சரி, இப்போது வறட்டு இருமலை சரிசெய்வதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

பழங்காலம் முதலாக வறட்டு இருமலுக்கு தேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்களுக்கு வறட்டு இருமல் வந்தால், வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

மஞ்சள்

மஞ்சள்

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த மஞ்சள் வைரஸ் நோய்த்தொற்றுகளான சளி, இருமல் போன்றவற்றை சரிசெய்ய உதவும். அதற்கு 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் ஓமத்தை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, தேன் கலந்து தினமும் மூன்று முறை குடித்து வந்தால், வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்தாலும், வறட்டு இருமல் தணியும்.

இஞ்சி

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை தட்டி, நீரில் போட்டு கொதிக்க விட்டு, அதில் தேன் கலந்து குடித்து வந்தால், வறட்டு இருமல் போய்விடும். இல்லையெனில் வறட்டு இருமல் வரும் போது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டுக் கொண்டால், வறட்டு இருமல் உடனே நின்றுவிடும்.

பூண்டு

பூண்டு

ஒரு டம்ளர் நீரை கொதிக்க விட்டு, அதில் சில பூண்டு பற்களை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் அதனை இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், தொண்டையில் உள்ள வறட்சி நீங்கி, வறட்டு இருமல் குணமாகும்.

உப்பு தண்ணீர்

உப்பு தண்ணீர்

வெதுவெதுப்பான உப்பு தண்ணீரை வாயில் ஊற்றி 15 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இப்படி தொடர்ந்து 3-4 முறை செய்து வந்தால், தொண்டையில் வறட்டு இருமலை உருவாக்கும் வைரஸ் அழிக்கப்பட்டு, வறட்டு இருமல் உடனே போய்விடும்.

ஆவி பிடித்தல்

ஆவி பிடித்தல்

ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து தட்டு கொண்டு மூடி கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் யூகலிப்டஸ் ஆயில் சில துளிகள் ஊற்றி அடுப்பை அணைத்து, பின் அந்த நீரைக் கொண்டு 5-10 நிமிடம் ஆவிப் பிடித்தால், வறட்டு இருமல் வருவது தடுக்கப்படும்.

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன்

இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்து வந்தால், இரவில் வறட்டு இருமல் வராமல் இருப்பதோடு, நல்ல நிம்மதியான தூக்கத்தையும் பெறலாம்.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி இலையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டி குடித்து வந்தால், வறட்டு இருமல் வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies for Dry Cough That Will Give You Instant Relief

Here are some home remedies for dry cough that will give you instant relief. Take a look...
Subscribe Newsletter