For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சீரகம்..!

By Maha
|

தற்போது குளிர் அதிகம் இருப்பதால் பலருக்கும் சளி, இருமல் போன்றவை எளிதில் தொற்றிக் கொள்கின்றன. இத்தகைய சளி, இருமலுக்கு பலரும் பல்வேறு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் எந்த ஒரு பலனும் இருந்திருக்காது. அப்படி வெளியே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வதை விட்டு, நம் வீட்டின் உள்ளேயே இருக்கும் குட்டி மருந்துக் கடையான சமையலறைக்கு சென்று அங்குள்ள அற்புதமான சில பொருட்களைக் கொண்டே சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணத்தைக் காணலாம்.

அப்படி சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியது தான் சீரகம். இந்த சீரகத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் சீரகத்தில் உள்ள சத்துக்களால் காயமடைந்த தசைகள் ரிலாக்ஸாகும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலில் உள்ள நோய்த்தொற்றுக்கள் விரைவில் குணமாகும்.

Get Instant Relief From A Cold With Jeera

அதுமட்டுமின்றி, சீரகத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சளிக்கு உடனடி நிவாரணத்தைத் தரும். இப்போது சீரகத்தைக் கொண்டு எப்படி சளிக்கு உடனடி நிவாரணம் காண்பது என்று பார்ப்போம்.

* 2 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் சிறிது இஞ்சி மற்றும் துளசி இலைகளை தட்டி சேர்த்து வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வந்தால், சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* சளியினால் மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தால், சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அத்துடன் சிறிது கிராம்பையும் சேர்த்து கொதிக்க விட்டு, பின் அந்த நீரை ஆவி பிடித்தால், மூக்கடைப்பு நீங்கி, நிம்மதியாக மூச்சு விட முடியும்.

English summary

Get Instant Relief From A Cold With Jeera

Here’s how you can use jeera to help relieve your cold. Take a look... 
Story first published: Wednesday, February 4, 2015, 18:17 [IST]
Desktop Bottom Promotion