'உச்சா" போனா செம "கப்பு" அடிக்குதா, கவலைய விடுங்க ஈஸியா சரி பண்ணிடலாம்!!!

By: John
Subscribe to Boldsky

ஆத்திரத்தை கூட அடக்கிவிடலாம், ஆனால், மூத்திரத்தை அடக்க முடியாது என்பார்கள், அதைவிட மோசமானது சிறுநீர் நாற்றத்தை பொறுத்துக் கொண்டிருப்பது. ஒரு தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாக்கிவிடும் இந்த பிரச்னை.

பெண்களே! பிறப்புறுப்பை துர்நாற்றமின்றி வைத்துக் கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

உங்கள் வீடு என்றால் பரவாயில்லை. ஒருவேளை எங்காவது உங்களது நண்பர் அல்லது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கும் போது சகிக்க முடியாத அளவு சிறுநீர் துர்நாற்றம் தாறுமாறாக அடித்தால் என்ன பண்ண முடியும். இதனாலேயே வெளி இடங்களுக்கு சென்றால் சிறுநீர் கழிக்காமல் இருப்பவர்களும் சிலர் இருக்கின்றனர்.

ஆண்களே! 'அந்த இடத்தில்' அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா?

சரி, இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று யாரிடமாவது கேட்கலாம் என்றால் அதற்கும் சங்கோஜம் அடைவார்கள். கவலையே வேண்டாம், வீட்டில் இருந்தபடியே எளிதான முறையில் இந்த சிறுநீர் துர்நாற்றப் பிரச்சனைக்கு தீர்வுக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இறுக்கமான உடைகளை தவிர்த்திடுங்கள்

இறுக்கமான உடைகளை தவிர்த்திடுங்கள்

இறுக்கமான உள்ளாடை அணிவதனாலும் இந்த சிறுநீர் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே, இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிருங்கள். அதற்கு பதிலாக காட்டன் துணியினாலான உள்ளாடைகளை அணியலாம். இது சிறுநீர் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க சிறந்த வகையில் பயனளிக்கும்.

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர்

தினமும் காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்து வந்தால், இந்த சிறுநீர் துர்நாற்ற பிரச்சனைக்கு தீர்வுக் காணலாம்.

நிறைய தண்ணீர் பருகுங்கள்

நிறைய தண்ணீர் பருகுங்கள்

சரியாக தண்ணீர் பருகாமல் இருப்பது, சிறுநீர் துர்நாற்றம் அதிகமாவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, தினமும் நன்கு தண்ணீர் பருகுங்கள். இது, சிறுநீர் துர்நாற்றத்தை போக்க வெகுவாக உதவும்.

மோர்

மோர்

மோரில், அரைத்த வெங்காயம் மற்றும் இஞ்சியை கலந்து தினமும் குடித்து வந்தால், சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண இயலும். காலை, மாலை இரு வேளைகளிலும் பருகி வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.

குருதிநெல்லி ஜூஸ் (Cranberry Juice)

குருதிநெல்லி ஜூஸ் (Cranberry Juice)

சிறுநீர் துர்நாற்றம் நீங்க, காலை வேளைகளில் குருதிநெல்லி ஜூஸ் பருகி வந்தால் நல்ல தீர்வுக் காணலாம். குருதிநெல்லி ஜூஸ் கிடைக்காவிட்டால், அதை அப்படியே கூட சாப்பிடலாம்.

மது அருந்துவது

மது அருந்துவது

அதிகமாக மது அருந்துவதனாலும், சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். எனவே, இந்த பிரச்சனை உள்ளவர்கள், மது அருந்துவதைக் குறைத்துக் கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies To Cure Smelly Urine

Do you know about the home remedies to cure smelly urine? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter