பீர் ஏன் உடலுக்கு நல்லது என்று சொல்கிறார்கள்?

Posted By:
Subscribe to Boldsky

மதுபானங்களிலேயே பீர் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. ஏனெனில் பீர் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்புகள் வலிமையடையும், சிறுநீரகங்கள் பாதுகாக்கப்படும் மற்றும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். மேலும் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு பீரைக் கொண்டே சரிசெய்ய முடியும். குறிப்பாக அதனை அளவாக பருகினால், அது மிகவும் சிறந்த ஓர் மருந்தாக இருக்கும்.

ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காத பத்து பீர்கள்!!

சமீபத்திய ஆய்வு ஒன்றில் பெண்கள் பீர் குடித்தால் என்ன நன்மை விளையும் என்று ஆராயப்பட்டது. அதில் பெண்கள் பீர் குடித்தால், 30 சதவீதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பு குறைவதாக தெரிய வந்துள்ளது. உங்களுக்கு பீர் குடிப்பது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்தால், இக்கட்டுரையைப் படியுங்கள்.

பீருக்கு சைடு டிஷ்ஷா எது நல்லா இருக்கும்ன்னு தெரியுமா...?

ஆனால் ஒன்று, பீரை அளவாகப் பருகினால் மட்டுமே நன்மையைப் பெறலாம். அளவுக்கு மீறினால், அதுவே உங்கள் உயிருக்கு உலை வைக்கலாம். சரி, இப்போது பீரைக் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீரக பிரச்சனைகள் குறையும்

சிறுநீரக பிரச்சனைகள் குறையும்

ஆய்வு ஒன்றில் பீர் குடித்தால் 40 சதவீதம் சிறுசீரக கற்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், அதை இயற்கை வழியில் கரைப்பதற்கு, பீர் உதவும்.

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகளின் ஆரோக்கியம்

2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் பீரில் உயர்ந்த அளவில் சிலிகான் இருப்பதால், எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பது தெரிய வந்தது. எனவே பீர் குடித்தால் உங்கள் எலும்புகளை வலிமையுடன் வைத்துக் கொள்ளலாம்.

 நீரிழிவு தாக்கம் குறைவு

நீரிழிவு தாக்கம் குறைவு

பீர் குடிப்பதால் பெறும் நன்மைகளில் ஒன்று, இது நீரிழிவு வரும் வாய்ப்பைக் குறைக்கும். மேலும் இந்த பானம் பித்த நீரின் உற்பத்தியை அதிகரிப்பதால், கொழுப்பு நிறைந்த உணவுகள் வேகமாக செரிக்கப்படுகிறது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்

உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதா? ஆம் என்றால், பீர் குடியுங்கள். பீரில் பீட்டா-க்ளுக்கான்கள், ஒருவகையான கரையும் நார்ச்சத்து உள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.

சூரியக் கதிர்களின் தாக்கத்தைத் தடுக்கும்

சூரியக் கதிர்களின் தாக்கத்தைத் தடுக்கும்

பீரில் பைட்டோ-நியூட்ரியன்ட்டுகள்ன பெரூலிக் அமிலம் உள்ளது. இது சூரியனின் கடுமையான புறஊதாக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கும்.

இரத்த அழுத்தம் குறையும்

இரத்த அழுத்தம் குறையும்

பீர் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். புதிய ஆய்வில், ஒயின் மற்றும் இதர பானங்களைக் குடிப்பவர்களை விட, பீரை அளவாக குடித்து வருபவர்களின் உடலில் இரத்த அழுத்தம் சீராக இருப்பது தெரிய வந்துள்ளது.

நோய்த்தொற்றுக்களை எதிர்க்கும்

நோய்த்தொற்றுக்களை எதிர்க்கும்

பீரில் உள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். எனவே உங்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், வாரம் 1-2 டம்ளர் பீர் குடியுங்கள். இதனால் நோய்கள் அண்டாமல் தடுக்கலாம்.

வாழ்நாளை நீட்டிக்கும்

வாழ்நாளை நீட்டிக்கும்

பீரை அளவாக குடித்து வந்தால், அது மனநிலையை எப்போதும் மென்மையாக வைத்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுத்து, உங்கள் வாழ்நாள் அளவை நீட்டிக்கும்.

மன அழுத்தம் நீங்கும்

மன அழுத்தம் நீங்கும்

பல ஆண்களும் அதிகளவு டென்சன் அல்லது மன அழுத்தத்துடன் இருக்கும் போது பாருக்கு சென்று பீர் அடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஏனெனில் பீர் நரம்புகளை தளரச் செய்து, மூளையை ரிலாக்ஸ் அடைய செய்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவி புரியும்.

புற்றுநோயை எதிர்க்கும்

புற்றுநோயை எதிர்க்கும்

பீரில் ஏராளமான சக்தி வாய்ந்த பொருட்கள் உள்ளது. அதிலும் ஜாந்தோஹூமால் என்னும் வலிமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பீரில் உள்ளதால், அது புற்றுநோயை ஏற்படுத்தும் நொதிகளைத் தடுத்து, புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy Reasons To Gulp Beer This Afternoon

Did you know beer is one of the many alcoholic drinks which is safe for you to consume. Here are the health benefits of drinking beer , take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter