For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பருக்கள் சுட்டிக் காட்டும் உடல்நல பிரச்சனைகள்!!!

By Maha
|

முகத்தைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தைக் கணக்கிடலாம் என்பது தெரியுமா? ஆம், முகமானது பிரகாசமாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பொலிவோடு இருந்தால், உடலில் எவ்வித நோயும் இல்லை என்று அர்த்தம். அதே முகத்தில் அடிக்கடி அல்லது திடீரென்று பருக்கள் வந்தால், அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

உங்கள் கைகளைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்!

பலருக்கும் முகப்பருக்களானது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையுடன் அழுக்குகள் சேர்ந்தால் தான் ஏற்படுகிறது என்று தெரியும். ஆனால் அந்த முகப்பரு நம் உடலில் உள்ள குறைபாடுகளாலும், பிரச்சனைகளாலும் வரும் என்பது தெரிந்திருக்காது.

உங்கள் உடல்நலத்தைப் பற்றி பாதங்கள் சொல்லும் 8 விஷயங்கள்!!!

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், உண்மையிலேயே நம் முகத்தில் வரும் பருக்களைக் கொண்டே நம் உடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ளலாம். சரி, இப்போது முகத்தின் எந்த பகுதியில் பருக்கள் வந்தால், நம் உடலில் என்ன பிரச்சனை உள்ளது என்பது குறித்தும், அந்த பருக்களை எப்படி போக்குவது என்பதையும் காண்போம்.

உங்கள் விரல் நகங்கள் கூறும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேல் நெற்றி

மேல் நெற்றி

மேல் நெற்றியில் பருக்கள் வருவதற்கு சிறுநீர்ப்பை மற்றும் பெருங்குடலில் பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தம். மேலும் மேல் நெற்றியில் பருக்கள் வரும் மக்களின் செரிமான மண்டலம் மோசமாக இருப்பதோடு, சிறுநீரக பாதையில் தொற்றுகளாலும் அவஸ்தைப்படுவார்கள்.

தீர்வு

தீர்வு

மேல் நெற்றியில் உள்ள பருக்களைப் போக்க, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ள தக்காளி, பெர்ரிப் பழங்கள், செர்ரிப் பழங்கள், ஆப்பிள், எலுமிச்சை, க்ரீன் டீ போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கீழ் நெற்றி

கீழ் நெற்றி

புருவத்திற்கு மேலே கீழ் நெற்றியில் பருக்கள் வந்தால், கவலை மற்றும் மன அழுத்தத்தால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள் என்று அர்த்தம்.

தீர்வு

தீர்வு

கீழ் நெற்றியில் உள்ள பருக்களைப் போக்க மனதை ரிலாக்ஸாக வைத்திருப்பதோடு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுங்கள். இதனால் உங்களின் மன அழுத்தம் மற்றும் கவலைகள் நீங்கி, உங்கள் முகம் பிரகாசமாகவும், பருக்களின்றியும் இருக்கும்.

புருவங்கள்

புருவங்கள்

புருவங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் பருக்கள், கல்லீரல் சரியாக செயல்படுவதில்லை என்பதைக் குறிக்கிறது. மேலும் நீங்கள் தவறான உணவுமுறையின் மூலம், உங்கள் கல்லீரலுக்கு அதிக வேலைப்பளுவைக் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தீர்வு

தீர்வு

கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் பருக்களைத் தடுக்க, கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை குறைவாக உண்பதோடு, புகைப்பிடித்தல், மது அருந்துவதை நிறுத்த வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உட்கொண்டு வந்தால், உடல் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

கன்னங்கள்

கன்னங்கள்

கன்னங்களில் வரும் பருக்களுக்கும், நுரையீரல் செயல்பாட்டிற்கும் தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது. மக்களுள் யார் அதிகம் புகைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நுரையீரல் பிரச்சனைகளான ஆஸ்துமா, நுரையீரல் அலர்ஜி அதிகம் வருவதோடு, கன்னங்களில் பருக்களும் ஏற்படுகிறது. வேண்டுமெனில் புகைப்பிடிப்போரைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

தீர்வு

தீர்வு

புகைப்பிடிப்பதை நிறுத்தினாலே போதும். கன்னங்களில் பருக்களை வருவதைத் தடுத்து, நுரையீரலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மூக்கு

மூக்கு

மூக்குகளில் பருக்கள் வருவது, இதயத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. மூக்குகளில் பருக்கள் வந்தால், இதய நோய்க்கு வழிவகுக்கும் பிரச்சனைகளான உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

தீர்வு

தீர்வு

கொழுப்புக்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, மாரடைப்பிற்கு வழிவகுக்கும். எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொண்டு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த அளவை சீராகப் பராமரியுங்கள்.

வாய்க்கு அருகில் மற்றும் தாடையில்

வாய்க்கு அருகில் மற்றும் தாடையில்

வாயைச் சுற்றி மற்றம் தாடையில் பருக்கள் வந்தால், அது வயிறு மற்றும் சிறுகுடலுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. மேலும் இப்பகுதிகளில் வரும் பருக்கள் இனப்பெருக்க உறுப்புக்கள், சிறுநீரகப் பாதை மற்றும் சிறுநீரகங்களுடன் தொடர்புள்ளதாகவும் நம்பப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் பருக்கள் வந்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படும்.

தீர்வு

தீர்வு

நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு, போதிய அளவு நார்ச்சத்துக்களைப் பெறுங்கள். எண்ணெய் உணவுகள், ஜங்க் உணவுகள் மற்றும் குளிர் பானங்களைத் தவிர்த்திடுங்கள்.

காதுகள்

காதுகள்

காதுகளில் வரும் பருக்கள் சிறுநீரக செயல்பாட்டுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. எப்போது உங்கள் சிறுநீரகம் சரியாக இயங்கவில்லையோ, அப்போது உங்கள் காதுகளில் பருக்கள் வருவதைக் காணலாம். மேலும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதையும் இது உணர்த்தும்.

தீர்வு

தீர்வு

குடிக்கும் நீரின் அளவை அதிகரித்து வந்தால், சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டிற்கு வேண்டிய தண்ணீர் கிடைத்து, பருக்களும் மறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Secrets That Your Acne Is Hiding

There are many hidden health secrets of acne on your face. Face acne can reveal many health conditions. You can solve acne problem naturally by finding out...
Desktop Bottom Promotion