எனர்ஜி ட்ரிங்க்ஸ் மற்றும் பிட்சாவினால் கல்லீரல் புற்றுநோய் - பாடி பில்டர் கவலைக்கிடம்!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது உலகளவில் ஃபேஷனாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணத்தினால், பலரும், நிறைய மாஸ் மற்றும் புரோட்டீன் பவுடர்களை நிறைய உட்கொள்கின்றனர். இது மட்டுமின்றி, உடல் சோர்வை தவிர்க்கவும், நிறைய பளுதூக்குவதற்கும் கூடுதலாக எனர்ஜி ட்ரிங்க்சும் எடுத்துக்கொள்கின்றனர்.

இதிலென்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தினமும் 7 முதல் 8 எனர்ஜி ட்ரிங்க் குடித்தவர் கல்லீரல் புற்றுநோயோடு போரிட்டு இன்று தனது மனைவி, குழந்தையை பிரிந்து உயிரிழந்து விண்ணுலகம் சென்றுவிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 39 வயதான பாடி பில்டர்

39 வயதான பாடி பில்டர்

கடந்த நவம்பர் மாதம் வரை பாடி பில்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தவர் டீம் வாம்ப்லி, திடீரென ஏற்பட்ட புற்றுநோய் எனும் சூறாவளியினால். இன்று தனது குடும்பத்தை பிரிந்துவிட்டார் டீம். உடலை பேணிகாக்க தினமும் இவர் உட்கொண்ட எனர்ஜி ட்ரின்க் தான் இவரது உயிரை குடித்த கல்லீரல் புற்றுநோய்க்கு காரணம் என்பது தான் ஜீரணிக்க முடியாத விஷயம்.

10,000 கலோரிகள்

10,000 கலோரிகள்

டீம் தனது உடலை கட்டுக்கோப்பாக பேணிகாக்க தினந்தோறும் 10,000 கலோரிகள் தேவைப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் 7 முதல் 8 எனர்ஜி ட்ரின்க் பருகி வந்துள்ளார் டீம். இது தான் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருந்துள்ளது.

மாபெரும் கட்டி

மாபெரும் கட்டி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டீமை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கல்லீரலில் உண்டாகியிருக்கும் புற்றுநோய் கட்டியானது மிகவும் பெரியது, அதை அகற்றுவது மிகவும் கடினமானது என்று கூறிவிட்டனர்.

டீம் தீவிர போராட்டம்

டீம் தீவிர போராட்டம்

இந்த கல்லீரல் புற்றுநோயிலிருந்து குணமாக தீவிரமாக போராடியுள்ளார் டீம். இதற்காக நிறைய டயட்டும் மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால், ஆவர், இதற்கு முன் எடுத்துக்கொண்ட அதிகப்படியான எனர்ஜி ட்ரின்க் அவரது உயிரை குடித்துவிட்டது.

ஸ்டெராய்ட்

ஸ்டெராய்ட்

ஆரம்பகாலத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஸ்டெராய்டும் எடுத்து வந்துள்ளார் டீம். இது மட்டுமின்றி கலோரிகளுக்காக நிறைய பிட்சா உண்ணும் பழக்கமும் இருந்துள்ளது டீம்'க்கு. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தான், பின்னாளில் குணமடைய முடியாத வகையில் டீமை படுக்கையில் சாய்த்துவிட்டது.

முகப்புத்தகத்தில் பிரச்சாரம்

முகப்புத்தகத்தில் பிரச்சாரம்

தனது உடல்நிலை குறித்தும் புற்றுநோய் குறித்தும் முகப்புத்தகத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வந்துள்ளார் டீம். இவரை முகப்புத்தகத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்வுகள்

பகிர்வுகள்

தான் பாதிக்கப்பட்ட விதமும், மேற்கொண்ட டயட் மற்றும் புற்றுநோய்க்கு முன்னர் இருந்த விதம். இயற்கையாக எவ்வாறு உடலை பேணிக்காக்க வேண்டும் என்று பல வகைகளில் முகப்புத்தகத்தில் தனது பதிவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார் டீம்.

20 வருடங்களுக்கு முன்பு

20 வருடங்களுக்கு முன்பு

உடல் பயிற்சியில் ஈடுபட தொடங்கியதில் இருந்து கடந்த 20 வருடங்களாக டீம்க்கு எந்த உடல்நல பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் தொடர்ந்து பருகி வந்த எனர்ஜி ட்ரின்க் தான், நாள்பட்ட கிருமியாக அவரது உடலை புற்றுநோய் மூலம் தாக்கி ஒரே அடியாக பறித்து சென்றுவிட்டது.

டீம்மின் மனைவி உருக்கம்

டீம்மின் மனைவி உருக்கம்

இவரை பிரிந்து வாடும் டீம் முகப்புத்தகத்தில் உருக்கமான பகிர்வை பதிவு செய்துள்ளார். மற்றும் பாடி பில்டிங்கில் ஈடுபடம் இளைஞர்கள் உட்கொள்ளும் ப்ரோடீன் பவுடர் மற்றும் எனர்ஜி ட்ரிங்கில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy

English summary

Excess Of Energy Drink And Pizzas Causes Liver Cancer

Tragedy as ex-bodybuilder, 39, loses battle with liver cancer which he blamed on 10,000 calorie per day pizza and energy drink diet.