சூயிங் கம் மெல்லுபவரா நீங்கள்? அப்ப கட்டாயம் இத படிச்சு பாருங்க...

Posted By:
Subscribe to Boldsky

நிறைய பேருக்கு எப்போதும் சூயிங் கம்மை மெல்லும் பழக்கம் இருக்கும். அப்படி சூயிங் கம் மெல்லும் பழக்கத்தினால் நிறைய பிரச்சனைகள் உடலில் ஏற்படும் என்பது தெரியுமா?

ஆம், சூயிங் கம் மெல்லுவதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். அதில் மூட்டு வலிகள், தலை வலி, வயிற்றுப்போக்கு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இப்போது நாம் பார்க்கப் போவது சூயிங் கம் மெல்லுவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி தான். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜங்க் உணவுகளை உண்ணத் தூண்டும்

ஜங்க் உணவுகளை உண்ணத் தூண்டும்

ஆய்வுகளில் சூயிங் கம் மெல்லுவதால், அதிலும் புதினா சுவை கொண்ட சூயிங் கம்மை மெல்லுவதால், ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடும் அளவு குறைவதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, சூயிங் கம் ஜங்க் உணவுகளின் மீது நாட்டத்தை அதிகப்படுத்திவிடுமாம்.

மூட்டு வலிகளை ஏற்படுத்தும்

மூட்டு வலிகளை ஏற்படுத்தும்

வாயில் உள்ள தசைகளுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுத்தால், அதனால் மூட்டுகளில் பிரச்சனைகள் அதிகமாகும். அதிலும் சூயிங் கம்மை தொடர்ந்து மென்றவாறு இருந்தால், அதனால் தாடையை மண்டையுடன் இணைக்கும் மூட்டுகள் மற்றும் தசைகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.

இரையகக்குடலியச் சிக்கல்கள்

இரையகக்குடலியச் சிக்கல்கள்

சூயிங் கம்மை அதிக அளவில் மெல்லுவதால், அளவுக்கு அதிகமான காற்றை உள்ளிழுக்கக்கூடும். இதன் மூலம் வயிற்று உப்புசம் மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படக்கூடும். அதுமட்டுமல்லாமல் செரிமான பிரச்சனை மற்றும் நெஞ்செரிச்சலும் ஏற்படக்கூடும்.

தலைவலி

தலைவலி

சூயிங் கம் மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு அடிக்கடி கடுமையான தலை வலி ஏற்படக்கூடும். இதற்கு அதில் உள்ள பதப்படுத்தும் பொருள், செயற்கை சுவையூட்டிகள் போன்றவை தான் காரணம்.

பற்களை பாதிக்கும்

பற்களை பாதிக்கும்

சூயிங் கம் மெல்லுவது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது தான் என்றாலும், அளவுக்கு அதிகமாகும் போது, அதுவே பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இதற்கு அதில் உள்ள சர்க்கரை படலம் தான் காரணம். அந்த சர்க்கரையானது வாயில் உள்ள பாக்டீரியாக்களுக்கு நல்ல உணவாக அமைந்து, அதனால் அந்த பாக்டீரியாக்கள் பற்கள் மற்றும் ஈறுகளை தாக்குகிறது.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

உண்மையிலேயே சூயிங் கம் மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். ஏனெனில் அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகளான மேனிடால் மற்றும் சோர்பிடால், குடலில் இடையூடை ஏற்படுத்தும். இப்படி தொடர்ந்து குடலில் இடையூறு ஏற்பட்டால், அதனால் வயிற்றுப்போக்கு மற்றும் உடல் வறட்சி ஏற்படக்கூடும்.

மெர்குரி என்னும் நச்சை வெளிப்படுத்தும்

மெர்குரி என்னும் நச்சை வெளிப்படுத்தும்

சில மக்கள் பற்களில் உள்ள ஓட்டையை மெர்குரி, சில்வர் மற்றும் டின் போன்றவை கொண்டு அடைத்திருப்பார்கள். இப்படி அடைத்திருக்கும் போது சூயிங் கம்மை அளவுக்கு அதிகமாக மெல்லுவதால், பற்களில் உள்ள மெர்குரி வெளிப்பட்டு, உடலினுள் சென்று, மோசமான விஷமான மாறி, நாளடைவில் அதுவே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Disadvantages Of Chewing Gum

Today Tamil Boldsky will share with you few reasons as to why not to eat a chewing gum. Let's take a look at some of the disadvantages of chewing gum. Following are some bad-effects of chewing gum.
Story first published: Tuesday, April 28, 2015, 15:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter