ஆண்மை மற்றும் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் வியக்க வைக்கும் இயற்கை பொடிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தூதுவளை, வல்லாரை, அருகம்புல், கடுக்காய், வில்வம், நாவல் என பல இயற்கை பொடிகள் உடலுக்கு பல நன்மைகளை விளைவிக்கின்றன. நீரிழிவு, ஆண்மை குறைபாடு, இரத்த கொதிப்பு, சளி, காய்ச்சல் என சிறிய பிரச்சனையில் இருந்து, பெரிய பெரிய பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் நாம் ஆங்கில மருத்துவத்தை தேடி ஓடுகிறோம்.

இதில் பலவன நமக்கு பக்கவிளைவுகள் தருகின்றன என தெரிந்தும் நாம் அதையே தான் உட்கொண்டு வருகிறோம். இனி, எந்த பக்க விளைவுகளும் அற்ற, நாமே வீட்டில் எளிதாய் தயாரிக்க கூடிய இயற்கை பொடிகளின் பயன்கள் குறித்து பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அருகம்புல் பொடி

அருகம்புல் பொடி

அதிகமான உடல் எடை கட்டுப்படுத்த, அதிகப்படியான கொழுப்பை குறைக்க மற்றும் சிறந்த முறையில் இரத்தத்தை சுத்திகரிக்க அருகம்புல் பொடி பயனளிக்கிறது.

நெல்லிக்காய் பொடி

நெல்லிக்காய் பொடி

பற்கள், எலும்புகளின் வலுவினை அதிகரிக்க நெல்லிக்காய் பொடியில் இருக்கும் வைட்டமின் "சி" பயனளிக்கிறது.

கடுக்காய் பொடி

கடுக்காய் பொடி

கடுக்காய் போடி குடல் புண்ணை ஆற்றவும், மலமிளக்க பிரச்சனைக்கு தீர்வு காணவும் உதவுகிறது.

வில்வம் பொடி

வில்வம் பொடி

அதிகமான கொழுப்பை குறைக்குவும், இரத்த கொதிப்பை கட்டுப்படுத்தவும் வில்வம் பொடி சிறந்தது.

நவால் பொடி

நவால் பொடி

சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கவும், தலைசுற்றுலை தடுக்கவும் சிறந்த பயன் தருகிறது நாவல் பொடி.

வல்லாரை பொடி

வல்லாரை பொடி

நினைவாற்றலை அதிகரிக்க வல்லாரை பொடியை தினமும் சாப்பிட்டு வரலாம். மற்றும் இது நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்த பயனளிக்கிறது.

தூதுவளை பொடி

தூதுவளை பொடி

நாள்பட்ட சளி தொல்லை, ஆஸ்துமா, வரட்டு இருமல் போன்ற பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்க கூடியது தூதுவளை பொடி.

துளசி பொடி

துளசி பொடி

மூக்கடைப்பு மற்றும் சுவாச கோளாறு உள்ளவர்கள் துளசி பொடியை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு பெறலாம்.

ஆவரம்பூ பொடி

ஆவரம்பூ பொடி

இதயத்தின் வலுவினை அதிகப்படுத்தவும், உடல் நலம் மேலோங்கவும் உதவுகிறது ஆவாரம்பூ பொடி.

கண்டங்கத்திரி பொடி

கண்டங்கத்திரி பொடி

மார்பு சளி, இரைப்பு நோய் போன்றவைக்கு சிறந்த தீர்வளிக்க தீர்வளிக்க கூடியது கண்டங்கத்திரி பொடி.

ரோஜாபூ பொடி

ரோஜாபூ பொடி

உடலை குளிர்சியாக்கவும், இரத்த கொதிப்பை குறைக்கவும் ரோஜாபூ பொடி நல்ல பயன் தரும்.

ஓரிதழ் தாமரை பொடி

ஓரிதழ் தாமரை பொடி

ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கு, பெண்களுக்கு வெள்ளைபடுதல் நீங்க ஓரிதழ் தாமரை பொடி நல்ல பயன்தரும். இது மூலிகை வயாகரா ஆகும்.

ஜாதிக்காய் பொடி

ஜாதிக்காய் பொடி

நரம்பு தளர்ச்சி நீங்கவும், ஆண்மை சக்தி அதிகரிக்கவும் ஜாதிக்காய் பொடி பயனளிக்கிறது.

திப்பிலி பொடி

திப்பிலி பொடி

உடல் வலி, அலுப்பு, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்க கூடியது திப்பிலி பொடி.

வெந்தய பொடி

வெந்தய பொடி

வாய் புண், வயிற்றுபுண் ஆற்றவும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும் வெந்தய பொடி உதவுகிறது.

கறிவேப்பிலை பொடி

கறிவேப்பிலை பொடி

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் நல்ல பலனளிக்கிறது கறிவேப்பிலை பொடி.

வேப்பிலை பொடி

வேப்பிலை பொடி

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய், உடலில் உள்ள நச்சுகளை அழிக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க என பல வகையில் சிறந்த பயன் தருகிறது வேப்பிலை பொடி.

செம்பருத்திபூ பொடி

செம்பருத்திபூ பொடி

அனைத்து வகை இருதய பிரச்சனைகளுக்கும் சிறந்த பயன் தரவல்லது செம்பருத்தி பூ பொடி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Health Benefits Of Some Natural Powders

Do you know about the amazing health benefits of some natural powders? read here.