ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஏலக்காய் என்றதுமே பலருக்கு முகம் பல கோணங்களில் போகும். ஏனெனில் ஏலக்காயை ஒருமுறை கடித்துவிட்டால் போதும், வாயின் சுவையே கெட்டுப் போய்விடும். அந்த அளவில் அதன் சுவை பலருக்கு கடுப்பை ஏற்படுத்தும். அதிலும் ஆசையாக லட்டு அல்லது பிரியாணி சாப்பிடும் போது தான் கடுப்பாவார்கள். மேலும் இனிமேல் அதனை உணவில் சேர்க்க வேண்டாம் என்றும் வீட்டில் உள்ளோரிடம் கத்துவார்கள். ஆனால் ஏலக்காய் தான் உணவின் சுவையையே அதிகரிக்கிறது என்பது தெரியுமா? ஏலக்காய் சேர்க்காவிட்டால் உணவே நல்ல மணமின்றி கேவலமாக இருக்கும்.

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஏலக்காய் உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது. எனவே உணவில் ஏலக்காய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டாம். இங்கு ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானம்

செரிமானம்

இஞ்சியைப் போலவே ஏலக்காயும் செரிமானப் பிரச்சனைகளைப் போக்கும். அதுமட்டுமின்றி, குமட்டல், அசிடிட்டி, வாய்வுத் தொல்லை, பசியின்மை, மலச்சிக்கல் போன்றவைகளையும் எதிர்த்துப் போராடிட உதவும்.

நச்சுக்களை வெளியேற்றும்

நச்சுக்களை வெளியேற்றும்

ஏலக்காய் சிறுநீரகம் பிரித்தெடுக்கும் நச்சுக்களை எளிதில் உடலில் இருந்து வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

உணவு உண்ட பின் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், செரிமானம் மட்டுமின்றி, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

சிறுநீரக ஆரோக்கியம்

சிறுநீரக ஆரோக்கியம்

ஏலக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம், அது சிறுநீரகப் பாரதை, சிறுநீர்ப்பை மறற்ம் சிறுநீரகம் போன்றவற்றை சுத்தமாகவும், எவ்வித தொற்றுக்களும் தாக்காதவாறு தக்க பாதுகாப்பை அளிக்கும்.

மன இறுக்கம்

மன இறுக்கம்

ஏலக்காய் சாப்பிடுவதனால் மன இறுக்கம் குறைவதாக ஆய்வில் நிரூபிக்கப்படாவிட்டாலும், ஆயுர்வேத மருத்துவத்தில் மன இறுக்கத்தைப் போக்க ஏலக்காயைப் பயன்படுத்தி டீ போட்டுக் குடிக்க சொல்வார்கள்.

வாய் ஆரோக்கியம்

வாய் ஆரோக்கியம்

ஏலக்காய் வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, வாய் அல்சர் மற்றும் தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றுக்களை குணமாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

சளி மற்றும் காய்ச்சல்

சளி மற்றும் காய்ச்சல்

ஏலக்காய் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் குணம் கொண்டது. மேலும் இது நுரையீரல் அழற்சி மற்றும் இருமல் போன்றவற்றையும் குணமாக்க உதவும்.

புற்றுநோய்

புற்றுநோய்

ஆய்வு ஒன்றில் ஏலக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ஒருசில புற்றுநோய்களையும் அழிக்கும் வல்லமை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஏலக்காய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

இரத்தம் உறைதல்

இரத்தம் உறைதல்

ஏலக்காய் உட்கொள்வதன் மூலம், தமனியின் சுவர்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ஏலக்காயில் உள்ள வைட்டமின்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்பட்டு, சரும செல்கள் பாதிப்பதைவதைத் தடுக்கும்.

நோய் கிருமிகள்

நோய் கிருமிகள்

ஏலக்காயில் நிறைந்துள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், உடலில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் சில நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.

நோயெதிர்ப்பு அழற்சி

நோயெதிர்ப்பு அழற்சி

இஞ்சி மற்றும் மஞ்சளைப் போன்றே, ஏலக்காயில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, உடலில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும்.

 விக்கல்

விக்கல்

ஏலக்காய் ஒரு வலிப்பு குறைவு மருந்து. இதனால் அது அடிக்கடி விக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் இது தன்னிச்சையற்ற தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

பாலுணர்வூட்டி

பாலுணர்வூட்டி

முக்கியமாக ஏலக்காய் மிகவும் சக்தி வாய்ந்த பாலுணர்ச்சியைத் தூண்டும் பொருள். குறிப்பாக இதனை ஆண்கள் உட்கொண்டு வந்தால், விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கி, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Amazing Health Benefits of Cardamom

Cardamom is one of the most common spices seen in an Indian household. Here are the top 15 health benefits of cardamom. Take a look...
Subscribe Newsletter