உடல்நல பிரச்சனைகளும்... அதற்கான அருமையான இயற்கை மருத்துவ நிவாரணிகளும்...

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

'உணவே மருந்து' என்று பெரியவர்கள் அறிவுரை சொல்வார்கள். ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவை மிகுந்த உணவு வகைகளை நாம் சாப்பிட்டு வந்தாலே எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சில சூப்பரான கை வைத்தியங்கள்!!!

இவற்றையும் மீறி நம் உடலில் நாள்தோறும் சிறு சிறு உபாதைகள் தோன்றுகின்றன. திடீர் சளி, காய்ச்சல், செரிமானப் பிரச்சனைகள், சருமத்தில் எரிச்சல்கள், தலைவலி, முதுகு வலி உள்ளிட்ட பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

சில சீரியஸான பிரச்சனைகள் ஏற்படும் போது மருத்துவரை நாடித்தான் ஆக வேண்டும். மற்ற பிரச்சனைகளை நாம் வீட்டிலிருந்து கொண்டே இயற்கையான வழிகளில் சரி செய்து கொள்ளலாம். அப்படிப்பட்ட சில இயற்கை நிவாரண முறைகளைப் பற்றிப் பார்க்கலாமா...?

விரல் நுனியில் இருக்கும் அதிசயிக்க வைக்கும் சிகிச்சைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் வலிகளுக்கு இஞ்சி

மாதவிடாய் வலிகளுக்கு இஞ்சி

சீனாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இஞ்சியை ஒரு பாரம்பரிய மருத்துவப் பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர். நல்ல இரத்த ஓட்டத்திற்கும், சதைகளில் ஏற்படும் எரிச்சலைக் குறைப்பதற்கும் இஞ்சி பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளை இஞ்சி அடித்து விரட்டுகிறது. அந்த சமயத்தில் சூடான இஞ்சி டீயைக் குடிப்பது மிகவும் நல்லது.

சிறுநீரகத்திற்கு குருதிநெல்லி

சிறுநீரகத்திற்கு குருதிநெல்லி

குருதிநெல்லி என்று அழைக்கப்படும் க்ரான்பெர்ரியில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின்ஸ் என்ற வேதிப் பொருள் சில சிறுநீரக நோய்த் தொற்றுக்கள் வராமல் தடுக்கிறது. தினமும் குருதிநெல்லி ஜூஸை சாப்பிட்டு வந்தால் இந்தத் தொற்றுக்களை முற்றிலும் தவிர்க்கலாம்.

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு கால்சியம் சத்து

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு கால்சியம் சத்து

ஒவ்வொருவரும் தினமும் 1,000 மில்லிகிராம் அளவு கால்சியத்தை நம் உடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, மாதவிடாய்க்கு முன் பெண்களுக்கு ஏற்படும் சில எரிச்சல்களுக்கு கால்சியம் ஒரு அருமருந்துதான்! பால் பொருட்கள், பாதாம், ப்ராக்கோலி உள்ளிட்டவற்றில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும்.

படை, சிரங்குக்கு ஓட்ஸ்

படை, சிரங்குக்கு ஓட்ஸ்

படை மற்றும் சிரங்கு போன்ற சரும் வியாதிகளினால் எரிச்சல் அடைபவர்களுக்கு ஓட்ஸ் சிறந்த மருந்தாகும். இதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள், எரிச்சலுக்கு எதிரான பண்புகளைக் கொண்டது. ஓட்ஸ் பவுடருடன் சுடுநீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கி, அது பால் போல் திரண்டு வந்ததும் அதைச் சாப்பிடலாம். ஓட்ஸ் உடன் போதுமான அளவு தண்ணீரைச் சேர்த்து அதை பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தேய்த்துக் கொண்டாலும் நல்ல பலன் கிடைக்குமாம்.

உலர் சருமத்திற்கு கடல் உப்பு

உலர் சருமத்திற்கு கடல் உப்பு

முழங்கை, முழங்கால், மற்றும் பாதங்களில் ஏற்படும் சொரசொரப்பான தோல்களை நீக்கி, மிருதுவாக்க அவற்றில் கடல் உப்பை வைத்துத் தேய்க்கலாம். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் அந்த இடங்கள் பளபளப்பாகும்.

வீங்கிய கண்களுக்கு வெள்ளரி

வீங்கிய கண்களுக்கு வெள்ளரி

கண்கள் வீங்கி பெரிதாக இருப்பதைக் குறைக்க வெள்ளரித் துண்டுகளை அவற்றின் மேல் வைத்துக் கொள்ளலாம். வெள்ளரியில் உள்ள 95% நீர்ச்சத்து, வீக்கத்தைக் குறைப்பதோடு, கண்களைக் குளுமையாகவும் வைத்துக் கொள்ளும். குறைந்தது 10 நிமிடங்களாவது கண்களின் மேல் வெள்ளரியை வைத்திருக்க வேண்டும்.

மலச்சிக்கலுக்கு உலர் திராட்சை

மலச்சிக்கலுக்கு உலர் திராட்சை

எளிதில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ள உலர்திராட்சையைத் தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

விக்கலுக்கு சர்க்கரை

விக்கலுக்கு சர்க்கரை

சிலருக்கு விக்கல் ஏற்பட்டால் அதை அவ்வளவு விரைவாக நிறுத்த முடியாமலிருக்கும். 'விக் விக்' என்று விக்கிக் கொண்டே இருப்பார்கள். தண்ணீரைக் குடித்தாலும் பலன் இருக்காது. ஆனால், அவர்களுடைய நாக்கின் அடியில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டால் விக்கல் நின்று போகுமாம்! சர்க்கரையில் உள்ள இனிப்புத் தன்மை தான் நரம்பு மண்டலத்தோடு செயல்பட்டு விக்கலை நிறுத்துகிறதாம்.

நெஞ்செரிச்சலுக்கு ஆப்பிள்

நெஞ்செரிச்சலுக்கு ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள பெக்டின் என்ற கரையக் கூடிய நார்ப் பொருள் வயிற்று அமிலங்களை எளிதில் கரைக்கக் கூடியதாகும். இதனால் ஆப்பிள் நிறைய சாப்பிடுவதால் நெஞ்சில் ஏற்படும் எரிச்சல்கள் குறைகின்றன.

புண்களுக்கு மஞ்சள்

புண்களுக்கு மஞ்சள்

மஞ்சள் ஒரு அருமையான கிருமி நாசினியாகும். இது நம் உடம்பின் உள்ளும் புறமும் அருமையாகச் செயல்படக் கூடியது. உடம்பில் ஏற்படும் காயங்களில் மஞ்சளை வைத்தால் விரைவில் அந்தக் காயங்கள் குணமாகும். நம் உணவுகளில் மஞ்சளைச் சேர்த்துக் கொண்டாலும் அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural-Born Soothers

It is very important to keep in mind that serious conditions need the attention of a doctor, it might not hurt to reach for one of these 10 items the next time you have a minor health problem.
Subscribe Newsletter