தினமும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

காலங்காலமாக இந்திய மக்கள் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய். இதனைக் கொண்டு கூந்தலைப் பராமரிப்பது மட்டுமின்றி, தென்னிந்திய மக்கள் இந்த தேங்காய் எண்ணெயை சமையலிலும் பயன்படுத்தி வருவார்கள். அதிலும் கேரள மக்கள் தான் இன்று வரை சமைக்கும் போது தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். இதனால் தான் அவர்கள் மிகவும் வலிமையாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள்.

கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த 15 அருமையான வழிகள்!!!

பலர் தேங்காய் எண்ணெயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதோடு, இதயமும் ஆரோக்கியத்தை இழந்துவிடும் என்று நினைக்கிறார்கள். தேங்காய் எண்ணெயில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கலாம். ஆனால் அவை உடலுக்கு மிகவும் அவசியமானவையாக இருப்பதோடு, இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் அடங்கியிருப்பதால், இதனை உணவில் சேர்த்து பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெயானது சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கும் நல்ல தீர்வைத் தரும். மேலும் பல்வேறு பொருட்களுக்கு சிறந்த மாற்றாகவும் விளங்கும். சரி, இப்போது தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொப்பையைக் குறைக்கும்

தொப்பையைக் குறைக்கும்

ஆச்சரியமாக உள்ளதா? ஆம், தேங்காய் எண்ணெயை சமைக்கும் போது பயன்படுத்தி வந்தால், அதில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள், கல்லீரலில் கொழுப்புகளாக தங்காமல், ஆற்றலை உற்பத்தி செய்யும். இதனால் தொப்பை வருவது தடுக்கப்படுகிறது. மேலும் இது ஆய்வு ஒன்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு

நீரிழிவு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்து வந்தால், இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

பற்களை வெண்மையாக்கும்

பற்களை வெண்மையாக்கும்

பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை போக்கவும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், தேங்காய் எண்ணெயில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு தினமும் பற்களை துலக்கி வந்தால், பற்கள் வெண்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வெண்ணெய்க்கு சிறந்த மாற்று...

வெண்ணெய்க்கு சிறந்த மாற்று...

வெண்ணெய் அல்லது நெய்க்கு சிறந்த மாற்றாக தேங்காய் எண்ணெய் விளங்கும். அதுமட்டுமல்லாமல், வெண்ணெய் அல்லது நெய்யை விட ஆரோக்கியமான கொழுப்புக்களானது தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ளது.

முதுமையைத் தடுக்கும்

முதுமையைத் தடுக்கும்

சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க, தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால், சரும சுருக்கங்கள் மறைந்து, சருமம் இளமையுடன் இருக்கும்.

சிறந்த மாய்ஸ்சுரைசர்

சிறந்த மாய்ஸ்சுரைசர்

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர். இதற்கு முக்கிய காரணம் அதல் உள்ள ஃபேட்டி ஆசிட் தான். எனவே இவற்றைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமம் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.

ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் தன்மைகள்

ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் தன்மைகள்

தேங்காய் எண்ணெயில் வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் தன்மையானது நிறைந்துள்ளது.

விரைவில் வயிற்றை நிரப்பும்

விரைவில் வயிற்றை நிரப்பும்

சமைக்கும் போது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், உணவின் சுவை அதிகரிப்பதுடன், உணவை அளவாக வயிறு நிறைய சாப்பிட முடியும்.

சிறந்த ஷேவிங் க்ரீம்

சிறந்த ஷேவிங் க்ரீம்

தேங்காய் எண்ணெயை ஷேவிங் லோஷன் போன்றும் பயன்படுத்தலாம். இதனால் ஷேவிங் செய்ததால் ஏற்பட்ட காயங்கள் குணமாவதோடு, வறட்சி ஏற்படாமலும் இருக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy Reasons To Use Coconut Oil Daily

Do you use coconut oil on a regular basis? If you don't, then you are missing out on the health benefits of coconut oil.