For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களே... ஆரோக்கியமான உடல் நலத்திற்கு லெமன் டீ சாப்பிடுங்க!!

By Karthikeyan Manickam
|

நம் ஊரில் ரோட்டுக் கடை முதல் பெரிய ஹோட்டல்கள் வரை நாம் சாதாரண டீயைக் குடித்திருக்கிறோம். ஆனால், இதைத் தவிர, நாம் குடிக்கும் டீ பல வகைகளில் கிடைக்கிறது. க்ரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ, ஊலாங் டீ, டெலிகேட் டீ என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

சூடான பானங்களில் டீ மட்டுமே உலகின் பெரும்பாலான பகுதிகளில் பெரிதும் விரும்பி அருந்தப்படுகிறது. சமீப காலங்களில், க்ரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ ஆகியவையும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

இவற்றில், லெமன் டீ மிகவும் அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் அது ரெடிமேடாகவே கிடைக்கிறது. பிளாக் டீயில் சில லெமன் துளிகளை விட்டால் அதன் சுவையே அருமையாக மாறி விடும். அதன் சுவைக்குப் பலர் அடிமையாகி உள்ளனர் என்பதும் உண்மை.

தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீயைக் கலந்து, சிறிது நேரம் கழித்து அதில் லெமன் துளிகளையும் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயார்! தினமும் லெமன் டீயைக் குடிப்பதால் நம் உடலுக்கு மிகவும் நல்லது என்று கண்டறியப்பட்டுள்ளது. லெமன் டீயின் உடல் நன்மைகள் குறித்துப் பார்ப்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானத்திற்கு...

செரிமானத்திற்கு...

நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாகச் செரிமானமாவதற்கு லெமன் டீ பெரிதும் உதவுகிறது. நம் உடலுக்கு ஒவ்வாத கண்டகண்ட உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், லெமன் டீ அவற்றைக் கரைத்து, உடல் செரிமானத்தை வலுவாக்குகிறது.

நரம்புகளுக்கு...

நரம்புகளுக்கு...

லெமன் டீயைக் குடிப்பதால் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களும் பலனடைகின்றன. நரம்புகளை சாந்தப்படுத்தும் லெமன் டீ, மூளை நரம்புகளையும் வலுவாக்குகிறது. இதனால் தலைவலி மற்றும் மன அழுத்தம் ஆகியவை நம்மை எளிதில் அண்டுவதில்லை.

இதயத்திற்கு...

இதயத்திற்கு...

சாதாரண டீ குடிப்பது பொதுவாகவே இதயத்திற்கு மிகவும் நல்லது. நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்டவற்றை குணப்படுத்துவதில் லெமன் டீ ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

இன்சுலினுக்கு...

இன்சுலினுக்கு...

நம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்சுலின் மிகமிக முக்கியமாகும். இன்சுலின் குறைவதால் நீரிழிவு ஏற்படும் என்று நம் அனைவருக்கும் தெரிந்ததே! இந்த இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்வதில் லெமன் டீ உதவுகிறது. ஆனால், நீரிழிவு உடையவர்களுக்கு இதுவே மருந்து என்று சொல்ல முடியாது. இருந்தாலும் அவர்களுக்கு லெமன் டீ உதவும் என்பதே உண்மை.

மெட்டபாலிசம்

மெட்டபாலிசம்

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் லெமன் டீயைக் குடித்து வந்தால், அது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். குறிப்பாக, குளிர் காலத்தில் லெமன் டீ குடிப்பது சுறுசுறுப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகமிக நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Lemon Tea

The following are the benefits of lemon tea. When you know more about the benefits, you will be able to avoid other beverages and stick only to drinking lemon tea.
Story first published: Thursday, August 28, 2014, 9:19 [IST]
Desktop Bottom Promotion