For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவு செரிக்க... தொப்பை குறைய... ஒற்றைக் கால் ஆசனம் செய்யுங்கோ!!!

By Karthikeyan Manickam
|

யோகாசனங்களிலேயே மிகவும் சிறந்தது ஏகபாத உட்டனாசனம் எனப்படும் ஒற்றைக் கால் ஆசனம் ஆகும். வயிற்றுத் தசைகளையும், மேற்புறத் தொடைகளையும் நன்றாகச் சுருக்க இந்த ஆசனம் உதவுகிறது.

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த ஆசனம் மிகவும் உதவுகிறது. மார்புப் பகுதி நன்றாகத் திறந்து, உடல் முழுவதும் புது ஆக்ஸிஜன் பாய்வதால் சீரான மூச்சு கிடைப்பதால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த ஆசனம் ஒரு வரப் பிரசாதம் தான்!

தொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்!

நம் உடம்பின் இடுப்புச் சதைகள் மற்றும் பின்புறப் பகுதிகளையும் வலுவாக்குவதற்கும் இந்த ஒற்றைக் கால் ஆசனம் உதவுகிறது. இந்த ஆசன நிலையில் நிற்கும் போது, செரிமான சக்தி அதிகரிப்பதோடு, சில செக்ஸ் உறுப்புக்களுக்கும் மசாஜ் செய்தது போலிருக்கும். பெண்களுக்கு சீரற்ற மாதவிலக்கு இருந்தாலும், அவர்களை இந்த ஆசனம் செய்யச் சொல்லி சில டாக்டர்களே வலியுறுத்துவார்கள்.

10 அடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்...

Ekapada Uttanasana - An Asana To Improve Digestion And Tone Your Tummy

இப்போது அந்த ஒற்றைக் கால் ஆசனம் செய்யும் முறையைப் பார்ப்போம்.

1. கால்களை நன்றாக விரித்து, கைகளை இரு புறங்களிலும் சாதாரணமாக வைத்து தரையில் மல்லாந்து படுக்கவும்.

2. அப்போது உங்கள் உடம்பு முழுவதும் ரிலாக்ஸாக இருக்க வேண்டும்.

3. பின் மூச்சை நன்றாக இழுத்து, வலது காலை உடம்புக்குக் குறுக்காக மேலே தூக்க வேண்டும். அப்போது காலை ஆட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், முதுகுப் புறம் பாதிக்கப்படும், உஷார்!

4. ஒரு ஆறு நொடிகள் அதே நிலையில் இருந்து, மூச்சையும் நன்றாக தம் பிடித்துக் கொள்ளவும்.

5. திரும்பவும் பழைய நிலைக்குச் செல்ல, மூச்சை நன்றாக வெளியேற்றி, அதே நேரத்தில் கால்களையும் கீழே இறக்க வேண்டும். ஆறு முறை இயல்பாக சுவாசித்த பின் மீண்டும், முதலில் இருந்து மறுகாலில் இந்த ஆசனத்தை செய்யவும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

English summary

Ekapada Uttanasana - An Asana To Improve Digestion And Tone Your Tummy

Ekapada uttanasana also known as the one-leg-raised yoga pose, is one of the best asanas to help tone the muscles of your abdomen and upper thighs.
Desktop Bottom Promotion