தீபாவளியன்று ஆஸ்துமா தொல்லையில் இருந்து விடுபட அற்புதமான வழிகள்!!!

Posted By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

ஆஸ்துமா என்றால் என்ன? சுவாசத்தின் போது நாம் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை நுரையீரலுக்குச் செல்ல விடாமல் தடுக்கும் சளி, நம் நுரையீரலையும் வீங்க வைத்திருக்கும். இதனால் ஆக்ஸிஜன் உள்ளே செல்ல முடியாமல், மார்பு இறுக்கமடையும்; நுரையீரலில் ஒருவிதமான ஒலி புறப்படும்; நம் சுவாசத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்படும். இந்தத் தொல்லைக்குப் பெயர்தான் ஆஸ்துமா!

சிகரெட் மற்றும் தூசி போன்ற மாசுள்ள காற்றை சுவாசித்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆஸ்துமாவுக்குக் காரணிகளாக உள்ளன. ஆஸ்துமா நோயாளிகளுக்கான ஒரு வரப்பிரசாதமாகவே ஒரு இன்ஹேலரைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த நோயாளிகள் எதை மறந்து போனாலும், இந்த இன்ஹேலரை மட்டும் தன்னுடன் வைத்திருக்க மறக்கவே மாட்டார்கள்.

ஒருவேளை, ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் கைவசம் அந்த இன்ஹேலர் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? அதிலும் தீபாவளி பண்டிகையின் போது இப்பிரச்சனைக்கு அதிகம் உள்ளாகக்கூடும். அப்போது அவர்கள் பதறக் கூடாது; மனம் உடைந்து போய்விடக் கூடாது. இன்ஹேலர் இல்லாத சமயத்திலும் ஆஸ்துமாவின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேராக உட்காரவும்

நேராக உட்காரவும்

ஆஸ்துமா பிரச்சனை காரணமாக மார்பு திடீரென இறுக்கமடையும் போது, என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே போட்டு, நேராக நிமிர்ந்து உட்காருங்கள். உடம்பை வளைத்து அமர்ந்தாலோ அல்லது படுத்தாலோ, சரியாகச் சுவாசிக்க முடியாமல் போகும்.

ஆழமாக மூச்சு விடவும்

ஆழமாக மூச்சு விடவும்

நேராக அமர்ந்தவாறு, நீளமாகவும் ஆழமாகவும் மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள். மூக்கின் மூலம் மூச்சை இழுத்து, வாயின் மூலம் வெளியேற்றுங்கள். அப்படிச் செய்தால்தான் சுவாசம் சீராகும்.

பதறாமல் இருக்கவும்

பதறாமல் இருக்கவும்

ஆஸ்துமா தன் வேலையைக் காண்பிக்கும் போது, 'அய்யோ, இன்ஹேலர் இல்லாமல் போச்சே' என்று பதறித் தவித்து விடாதீர்கள். பதறினால் மார்பின் இறுக்கம் மேலும் அதிகமாகித் தொல்லை கொடுக்கும். அப்படிப் பதறாமல், அமைதியாக இருந்தாலே போதும். மார்பின் இறுக்கம் தளர்ந்து, சுவாசமும் சீராகும்.

காரணிகளிலிருந்து தள்ளி இருக்கவும்

காரணிகளிலிருந்து தள்ளி இருக்கவும்

எந்த ஒவ்வாமை காரணமாகத் தன்னை ஆஸ்துமா தாக்கும் என்று ஒவ்வொரு ஆஸ்துமா நோயாளிக்கும் நன்றாகவே தெரியும். அந்தக் காரணிகளிலிருந்து அவர்கள் எப்போதும் தள்ளியே இருக்க வேண்டும். அதிலும் தீபாவளி அன்று வெளியே அதிகம் சுற்றக்கூடாது. ஏ.சி. அறை அல்லது தூய்மையான காற்று கிடைக்கும் இடத்திற்கு உடனடியாக அவர்கள் நகர்ந்து விட வேண்டும்.

சூடான பானம் குடிக்கவும்

சூடான பானம் குடிக்கவும்

ஆஸ்துமாவினால் அவதிப்படும் நேரத்தில், காபி போன்ற சூடான பானத்தைக் குடிப்பது நல்லது. அது சுவாசத்தை சீராக்கும் உடனடி நிவாரணியாக இருக்கும். மேலும் ஓரிரு மணிநேரத்திற்குத் தாக்குப் பிடிக்கவும் அது உதவியாக இருக்கும்.

அவசர உதவி கோரவும்

அவசர உதவி கோரவும்

ஆஸ்துமாவின் காரணமாகத் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு மூச்சு விட சிரமப்பட்டாலோ அல்லது இருமல் இருந்தாலோ, அசட்டையாக இருந்து விடாதீர்கள். உதவிக்கு உடனடியாக யாரையாவது அழைக்கவும். தேவைப்பட்டால், சட்டென்று 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை அழைத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Ways To Survive Asthma Attack

Here are six things that you can do when you have an asthma attack and do not have an inhaler handy.
Story first published: Wednesday, October 22, 2014, 9:02 [IST]