ஞாபக மறதி ஏற்படுவதற்கான விந்தையான 9 காரணங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

மறதி என்பதை நாம் பெரும்பாலும் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வோம். சிலர் இயற்கையாகவே மறதியை கொண்டுள்ளனர் என கூறுவோம். அதே போல் சிலருக்கு கூர்மையான ஞாபக சக்தி இருக்கும். அனைவருக்குமே நல்ல ஞாபக சக்தி இருக்காது என்பது உண்மையே. இருப்பினும் பெரியவர்களுக்கு ஏற்படும் மறதிக்கான காரணத்தை லேசாக விடக்கூடாது. உங்கள் நினைவாற்றலின் மீது நீங்கள் கட்டுப்பாட்டை கொள்ள முடியாது. அதனால் நாள்பட நாள்பட, உங்கள் மறதியின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது என்றால், மறதிக்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வயதாகும் போது அதற்கேற்ப உங்கள் மூளையும் தேயும். குழந்தைகளின் மூளை ஸ்பாஞ்சை போன்றது; தங்களை சுற்றியுள்ள அனைத்தையும் அவர்களால் ஈர்த்துக் அவைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும். இருப்பினும் உங்களுக்கு வயது ஏறும் போது, உங்கள் மூளையில் பல விஷயங்கள் குடியேறும். இதனால் மறதியும் வந்து விடும். அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஹார்மோன்கள் போன்ற பிரச்சனைகளால் தான் மறதி ஏற்படுகிறது.

மருந்து மற்றும் போதை பொருட்கள் உங்கள் மூளையின் கூர்மையை இழக்கச் செய்யும். உங்கள் நினைவாற்றலின் அடிப்படையில், உங்களுக்கு வந்திருப்பது ஞாபக மறதியா அல்லது மூளைத்தேய்வா என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதனால் மறதியின் காரணங்களைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கமின்மை

தூக்கமின்மை

பெரியவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது தூக்கமின்மை. தினமும் இரவில் 8 மணி நேர அமைதியான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் புத்தி தெளிவில்லாமல் இருக்கும். அதனால் விஷயங்களை மறந்து குழப்பத்தில் இருப்பார்கள். ஒரு கால கட்டத்தில், தூக்க இழப்பு மூளை தேய்வை உண்டாக்கி விடும்.

அழுத்தம்

அழுத்தம்

உங்கள் மனமானது அழுத்தத்தில் அவதிப்படும் போது பாதிக்கப்பட போவது உங்கள் நினைவாற்றல் தான். அழுத்தம் இருக்கையில் உங்களுக்கு எதன் மீதும் கவனம் இருக்காது. அது நினைவாற்றல்களை மறைக்கும். இந்நிலை இல்லாமல் போனால் நினைவுகள் எல்லாம் தங்கக்கூடும்.

போதைப் பொருட்கள்

போதைப் பொருட்கள்

நீங்கள் அளவுக்கு அதிகமாக புகைப்பிடிப்பவரா? அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்துவரா? அப்படியானால் உங்கள் ஞாபக சக்தியை அது வெகுவாக பாதிக்கும். அவ்வகை போதைப் பொருட்கள் உங்கள் மூளையை மெதுவாக செயல்படுத்த வைத்து சோம்பேறியாக்கிவிடும். இதன் விளைவாக, உங்களுக்கு அதிக மறதி ஏற்படும்.

ஹைபோதைராய்டு

ஹைபோதைராய்டு

உங்கள் தைராய்டு சுரப்பி இயல்பு நிலையில் செயல்படவில்லை என்றால், உங்கள் ஞாபக சக்தி பாதிக்ககூடும். இதனால் தூக்கம் கெட்டு போகும். உணர்ச்சி ரீதியான தொந்தரவுகளும் கூட ஏற்படலாம்.

கர்ப்பம்

கர்ப்பம்

கர்ப்ப காலம் என்றாலே குளறுபடியான நினைவாற்றல்களே. மூளையில் மூடுபனியை உண்டாக்கிவிடும் கர்ப்ப ஹார்மோன்கள். கர்ப்பிணி பெண்கள் வார்த்தைகளை, தேதிகளை மறப்பார்கள். மொத்தத்தில் கவனக் குறைவாக இருப்பார்கள். பொருட்களை எங்கே வைத்தார்கள் என்பதை அவர்கள் மறந்து போவதால், அதனை சுலபமாக தொலைத்து விடுவார்கள்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

மதுபானம் அருந்தினால், ஹேங் ஓவர் போன பிறகும் கூட அது உங்களை தாக்கும். அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், தகவல்களின் மீதான உங்கள் கவனம் சிதறும். குடிக்கும் அளவு அதிகரிக்கையில் குறுகிய கால மறதியும் கூட ஏற்படலாம். ஒரு கட்டத்தில் எல்லாமே மறந்து போகும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி ரீதியான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டால், இயல்பற்ற முறையில் உங்களுக்கு மறதி உண்டாகலாம். உங்கள் மனது எங்கேயோ அலைந்து கிடப்பதால், ஆங்காங்கே சிலவற்றை மறந்து போவீர்கள்.

வயதாவது

வயதாவது

உங்களுக்கு வயது அதிகரிக்கும் போது, உங்கள் சருமம் சுருக்கமடையும்; உங்கள் கண் பார்வை மங்கும்; உங்கள் மூளை அணுக்கள் மெதுவாகும். 17 வயதில் இருந்த புத்திக் கூர்மை 70 வயதில் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது வெறும் ஞாபக மறதியா அல்லது மூளை தேய்வா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

மருந்துகள்

மருந்துகள்

சில வகையான மருந்துகள் உங்கள் மூளையை தெளிவில்லாமல் ஆக்கி விடும். சளிக்காக இருமல் மருந்தை கொஞ்சமாக குடித்தாலும் கூட அதனால் உங்களுக்கு கொஞ்சம் மறதி ஏற்படலாம். ஆனாலும் அழுத்தத்தை நீக்க உண்ணும் மாத்திரைகளும் ஹார்மோன் மாத்திரைகளும் ஞாபக மறதியை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

9 Strange Causes Of Forgetfulness

Causes of forgetfulness can sometimes really surprise you. If you want to know the causes of forgetfulness in adults, read on..
Subscribe Newsletter