For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

அசைவ ஹோட்டல்களுக்கு சென்றால், அங்கு முதலில் அனைவரும் ஆர்டர் செய்வது பிரியாணியாகத் தான் இருக்கும். அந்த பிரியாணியானது அரிசியால் செய்யக்கூடியது. பொதுவாக எடையை குறைக்க டயட் மேற்கொள்வோர் சாதம் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!!!

என்ன தான் சாதமானது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவிப் புரிந்தாலும், இதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், உடல் எடையானது அதிகரிக்கும்.

மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மேலும் நிறைய பேருக்கு சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிகிறதோ இல்லையோ, நிச்சயம் அதை சாப்பிடாமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாதம் சாப்பிடுவதால் நன்மைகளும், தீமைகளும் சரிசமமாக உள்ளது.

கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!

சில இடங்களில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சாதத்தை உட்கொள்வார்கள். ஆனால் இதை அளவாக உட்கொண்டால் நல்லது தான். அதுவே அளவுக்கு அதிகமாக போனால், வயிறானது முற்றிலும் நிறைந்து தொந்தரவை ஏற்படுத்தும். எனவே தான் இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தலை முதல் கால் வரை ஆரோக்கிய நன்மைகள் தரும் ஆட்டிறைச்சி!!!

இங்கு சாதத்தை சாப்பிடாமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சர்க்கரை அளவு சீரகா இருக்கும்

இரத்த சர்க்கரை அளவு சீரகா இருக்கும்

சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். மேலம் அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

தினமும் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தும்.

நீரிழிவு

நீரிழிவு

வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சாதம் சாப்பிட ஆசைப்பட்டால், கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை சாப்பிடுங்கள்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடுகையில் வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளதால், இதனை அதிகம் எடுத்துக் கொள்வதால் எவ்வித சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் போவதில்லை.

கார்போஹைட்ரேட்

கார்போஹைட்ரேட்

உடல் எடையை குறைக்க வேண்டுமானால், குறைந்தது ஒரு மாதத்திற்கு வெள்ளை சாதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் வெள்ளை சாதத்தில் அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளதால், உடலின் எடையானது இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும்.

அதிக அளவு ஸ்டார்ச்

அதிக அளவு ஸ்டார்ச்

நிபுணர்களின் கருத்துப்படி, மனித உடலுக்கு அதிகப்படியான ஸ்ரார்ச் இருப்பது நல்லதல்ல. ஏனெனில் இவை இரத்த சர்க்கரையின் அளவை அளவுக்கு அதிகமாக்கிவிடும்.

அலர்ஜி

அலர்ஜி

நிறைய மக்களுக்கு வெள்ளை சாதமானது அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே வெள்ளை சாதத்தை சாப்பிடாமல், கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுங்கள்.

தொப்பையை ஏற்படுத்தும்

தொப்பையை ஏற்படுத்தும்

கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடும் போது, வெள்ளை சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், தொப்பை வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அவை பசி உணர்வை அடிக்கடி ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Benefits Of Not Eating White Rice

The health benefits of not eating rice are listed below. The pros and cons of eating white rice will amaze you. Take a look.
Desktop Bottom Promotion