தூக்கத்தைப் பற்றியும் அதனால் உடல்நலத்திற்கு ஏற்படும் தாக்கத்தை பற்றியுமான 7 கட்டுக்கதைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

வாழ்க்கையில் சந்திக்கும் பல காரணிகளின் அடிப்படையில், தூங்கும் நேரம் ஒவ்வொருத்தருக்கு இடையே மாறுபடும். தூக்கத்தை பற்றி பல தவல்கள் இருந்தாலும் கூட, அதனை பற்றி பல கட்டுக்கதைகளும் இருக்க தான் செய்கிறது. ஆனால் தூக்கத்தை பற்றிய இந்த கட்டுக்கதைகளால், தூக்கத்தை பற்றிய கருத்தமைவை பற்றிய நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களை நாம் எடுத்துக் கொள்ளும் விதம் மாறப்போவதில்லை.

தூக்கத்தைப் பற்றிய சில புகழ்பெற்ற கட்டுக்கதைகளையும் அதனால் நம் உடல்நலத்தில் ஏற்படும் தாக்கத்தையும் இன்று பார்க்கப்போகிறோம். தூக்கத்தினால் உடல் நலத்தின் மீது உண்டாகும் தாக்கத்தை பற்றி பல தவறான முத்திரைகள், பல வருடமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பலவும் கட்டுக்கதைகள் தான் என தெரிந்தால் கண்டிப்பாக நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

குறைவாக தூங்கினாலோ அல்லது அதிகமாக தூங்கினாலோ அதனால் உடல்நலத்தில் உண்டாகும் தாக்கங்கள் கண்டிப்பாக உறுதியானவை. ஒருவரின் தூக்க அமைப்பு தான் அவர் உடலின் மெட்டபாளிச வீதத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பல வகையான உடல்நல பயன்களும் தீமைகளும் ஏற்படக்கூடும். தூக்கத்தை பற்றிய இவ்வகையான கட்டுக்கதைகளையும் அதனால் நம் உடல் நலத்தில் ஏற்படும் தாக்கங்களையும் இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும் குறைந்தது 6 மணிநேர தூக்கம் அவசியமாகும்

தினமும் குறைந்தது 6 மணிநேர தூக்கம் அவசியமாகும்

ஆம், பலரும் அதிகமாக பேசும் புகழ்பெற்ற கட்டுக்கதை இது. சொல்லப்போனால், உடலின் அணுக்கள் நுட்பத்தை பொறுத்து தான் தேவைப்படும் தூக்கத்தின் அளவு நிர்ணயிக்கபப்டும். ஒருவர் தினமும் 4 1/2 மணிநேரம் தூங்கினாலே போதும். அதனால் குறைந்தபட்ச தூக்கத்தின் தேவையைப் பற்றிய கட்டுக்கதை உண்மையானது அல்ல.

குட்டி தூக்கம் போட்டால் சோர்வை ஏற்படுத்தும்

குட்டி தூக்கம் போட்டால் சோர்வை ஏற்படுத்தும்

கண்டிப்பாக குட்டித்தூக்கம் போட்டால், அதனால் நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள். சொல்லப்போனால், 15 நிமிட குட்டித் தூக்கம், உங்களை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

தூங்கும் முன் உடற்பயிற்சி செய்தால் தூக்கம் கெட்டுவிடும்

தூங்கும் முன் உடற்பயிற்சி செய்தால் தூக்கம் கெட்டுவிடும்

தூங்கும் முன் உடற்பயிற்சி செய்தால் தூக்கம் கெட்டுவிடும் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்று தெரியுமா? படுக்க செல்லும் முன் உடற்பயிற்சி செய்தால் நல்ல தூக்கம் வரும்.

வார இறுதியில் நன்றாக தூங்குவது

வார இறுதியில் நன்றாக தூங்குவது

"வார இறுதியில் சேர்த்து வைத்து நன்றாக தூங்கி விடு" என பலர் சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் இது சுத்த பொய்! தினமும் குறைவான நேரத்திற்கு தூங்கி விட்டு, வார இறுதியில் மட்டும் அதற்கு ஈடு செய்யும் விதத்தில் அதிகமாக தூங்குவது சுத்த முட்டாள்தனம். கண்டிப்பாக அது சரியானதல்ல.

எந்த நேரத்தில் தூங்க செல்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல

எந்த நேரத்தில் தூங்க செல்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல

பரவலாக நம்பப்படும் மற்றொரு கட்டுக்கதை இது. நீங்கள் எந்த நேரத்தில் தூங்க செல்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். அது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தின் மீது நேரடி தாக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும் இரவு நீண்ட நேரம் விழித்திருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் இடர்பாடு அதிகமாக உள்ளது.

 தீவிர தூக்க ஒழுங்கின்மைக்கு மட்டுமே தூக்க மாத்திரைகள்

தீவிர தூக்க ஒழுங்கின்மைக்கு மட்டுமே தூக்க மாத்திரைகள்

தூக்கமின்மை பிரச்சனை தீவிரம் அடைவதற்கு முன் ஆரம்ப கட்டத்திலேயே தூக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால் அது திறம்பட செயல்படும் என ஆய்வுகள் கூறுகிறது. தூக்கமின்மை தீவிரமடைவதற்கு முன்னதாகவே தூக்க மாத்திரைகளை எடுத்து கொண்டால் அது நல்ல பலனை அளிக்கிறது.

சந்திப்பின் போது தூக்கம் வருவது இயல்பே

சந்திப்பின் போது தூக்கம் வருவது இயல்பே

நீங்கள் கல்லூரியில் இருக்கும் போது, மதிய உணவிற்கு பிறகு அறுவையான பாடம் எடுக்கப்பட்டால், உங்களுக்கு தூக்கம் வரலாம். ஆனால் உங்கள் நிறுவனத்தின் இயக்குனர் உடனான சந்திப்பில் உங்களுக்கு தூக்கம் வந்தால் அது கண்டிப்பாக இயல்பான விஷயம் கிடையாது. நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளாத அளவுக்கு அதிகமான சோர்வே அதற்கு காரணம். கண்டிப்பாக அதன் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Myths About Sleep And The Impact On Health

Here are 7 myths about sleep and the subsequent impact on health. Read on...
Story first published: Thursday, October 23, 2014, 9:01 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter